இந்தியா (National)

ஜம்முவில் பொதுக்கூட்டம்- புதிய கட்சி குறித்து அறிவிக்கிறார் குலாம்நபி ஆசாத்

Published On 2022-09-04 07:36 GMT   |   Update On 2022-09-04 07:36 GMT
  • ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார்.
  • பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார்.

73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அவர் ராகுலை கடுமையாக சாடி இருந்தார்.

குலாம்நபி ஆசாத்துக்கு ஆதராக காஷ்மீரில் பல காங்கிரஸ் தலைவர்கள் விலகினார்கள். காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.

புதிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் வெளியிடுகிறார்.

இதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் குலாம்நபி ஆசாத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்-மந்திரி பதவியை குலாம்நபி ஆசாத் கைப்பற்றுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News