இந்தியா (National)

அரியானா சட்டசபை தேர்தல்- 20 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்

Published On 2024-10-12 07:55 GMT   |   Update On 2024-10-12 07:55 GMT
  • வாக்குப்பதிவு எந்திர பேட்டரியில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டியது.
  • புகார் குறித்து அனைத்துக்கும் விரிவான பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா சட்டசபை தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது. மொத்தம் உள்ள 90 இடங்களில் அந்த கட்சிக்கு 37 தொகுதிகள் கிடைத்தன.

பா.ஜ.க. 48 இடத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

அரியானா தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பேட்டரியில் உள்ள முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தது.

இந்த நிலையில் இந்த முரண்பாடுகள் குறித்து காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்துள்ளது. அரியானா தேர்தலில் போட்டியிட்ட 20 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்கள் இந்த புகார் மனுவை அளித்துள்ளனர்.

சில இ.வி.எம். எந்திரங்களில் 99 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்தது. சில வாக்குப்பதிவு எந்திரத்தில் 60 முதல் 70 சதவீத பேட்டரி சார்ஜ் இருந்தது. இது எதிர்பாராத ஒன்று என்று காங்கிரஸ் தனது மனுவில் குற்றம் சாட்டியது. வாக்குப்பதிவு எந்திர பேட்டரியில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டியது.

இந்த புகார் குறித்து அனைத்துக்கும் விரிவான பதில் அளிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News