இந்தியா

தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்த தெலுங்கு தேசம்

Published On 2024-03-09 13:00 GMT   |   Update On 2024-03-09 13:00 GMT
  • 6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
  • இந்தக் கூட்டணியால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

அமராவதி:

ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்தது.

இந்த அழைப்பை ஏற்று சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க.-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இணைந்துள்ளது என அக்கட்சியின் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளதால் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News