இந்தியா (National)

முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பொய் கண்டறியும் சோதனைக்கு தயாரா? சந்திரசேகரராவின் மகன் சவால்

Published On 2024-10-26 09:38 GMT   |   Update On 2024-10-26 09:38 GMT
  • காங்கிரஸ் அரசு தனது முதல் 100 நாட்களுக்குள் முக்கிய வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
  • காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நீதி சமத்துவம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறார்.

திருப்பதி:

தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகரராவின் மகன் கே. டி. ராமராவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அவரது சொந்த அமைச்சர்களின் செல்போன் உரையாடல்களை ஒட்டு கேட்கிறார்.

நான் அவருக்கு பகிரங்க சவால் விடுக்கிறேன். செல்போன்கள் ஒட்டு கேட்பதில் ஈடுபடுவதில்லை என்பதை நிரூபிக்க கேமராக்களுக்கு முன்பாக அவருக்கு பொய் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். அதற்கு ரேவந்த் ரெட்டி முன் வருவாரா?

காங்கிரஸ் அரசு தனது முதல் 100 நாட்களுக்குள் முக்கிய வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நீதி சமத்துவம் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி அடிக்கடி பேசுகிறார். ஆனால் தெலுங்கானாவில் விளிம்பு நிலை சமூகங்களுக்கு எதிரான காங்கிரஸ் தலைமையிலான அரசின் நடவடிக்கைகள் குறித்த அவர் மவுனம் காக்கிறார்.

ஏழைகளை அச்சுறுத்தும் காங்கிரஸ் தலைமையிலான புல்டோசர் ஆட்சியில் இருந்து தெலுங்கானாவில் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை பாதுகாப்பதற்கு ராகுல் காந்தி முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News