இந்தியா (National)

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தூதராக எம்.எஸ். டோனி நியமனம்

Published On 2024-10-26 06:14 GMT   |   Update On 2024-10-26 07:07 GMT
  • ஜார்க்கண்டில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
  • எம்.எஸ். டோனி தனது படத்தை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் அவரை தேர்தலுக்கான தூதராக நியமனம் செய்துள்ளது. எம்.எஸ். டோனி சட்டமன்ற தேர்தலுக்கான தனது படத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணை அதிகாரி கே. ரவி குமார் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ். டோனி அவரது படத்தை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளார். மற்ற விவரங்களுக்காக அவரை தொடர்பு கொண்டுள்ளோம். எம்.எஸ். டோனி வாக்களர்களை திரட்டும் (வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்) பணியில் ஈடுபடுவார்" எனத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. 38 தொகுதிகளுக்கு நவம்பர் 20-ந்தேதி 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

Similar News