கெட்டுப்போன பிரியாணி சாப்பிட்ட மூன்று மாணவர்கள் உயிரிழப்பு
- கிறிஸ்தவ அமைப்பு விடுதியில் மாணவர்களுக்கு பிரியாணி, சமோசா வழங்கப்பட்டது.
- விடுதியில் சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
ஆந்திராவில் கெட்டுப்போன பிரியாணி மற்றும் சமோசா சாப்பிட்ட 3 பழங்குடியின மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அனகாபள்ளி மாவட்டம் கொடவரோட்லா மண்டல் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்பின் விடுதிகளை சேர்ந்த மாணவர்கள் அங்கு வழங்கப்பட்ட சமோசா மற்றும் பிரியாணியை சாப்பிட்டனர்.
விடுதிகளில் சமோசா, பிரியாணி சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 30-க்கு் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், இரண்டு மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்ததால், மாணவர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது. இந்த வரிசையில், ஆந்திர மாநிலத்திலும் உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.