டேட்டிங் செயலியால் ரூ.45 ஆயிரம் இழந்த வாலிபர்
- பெண்ணுடன் டேட்டிங் உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் கேட்டதை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார்.
- பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
டெல்லி, மும்பை போன்ற நகரப்பகுதிகளில் டேட்டிங் கலாச்சாரம் வேகமாக பரவி வரும் நிலையில் இளம் ஜோடிகள் தங்கள் துணையை தேடுவதற்காகவே பிரத்யேக செயலிகளும் உள்ளது.
இந்நிலையில் இந்த செயலிகளை பயன்படுத்தி சில மோசடி சம்பவங்களும் நடக்கிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரபல டேட்டிங் செயலிகளில் ஒன்றான டிண்டர் செயலி மூலம் அறிமுகமான ஒரு பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். அந்த பெண்ணுடன் டேட்டிங் உற்சாகத்தில் இருந்த வாலிபர் அந்த பெண் கேட்டதை எல்லாம் ஆர்டர் செய்திருக்கிறார்.
18 ஜாகர்பாம்ப்ஸ், 2 ரெட்புல்ஸ், பிரெஞ்ச்பிரைஸ், சாலட் உள்பட உணவு வகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போனது. இவற்றையெல்லாம் ருசித்த வாலிபர் பில் வந்த போது அதிர்ச்சியடைந்தார். காரணம் அந்த பெண் ஆர்டர் செய்த உணவுக்கு ரூ.44.829 பில் வந்தது. பின்னர் நண்பரிடம் உதவி கேட்டு பில் தொகையை செலுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட அந்த வாலிபரின் நண்பர் உணவக பில்லை ரெடிட் தளத்தில் பதிவிட அது பயனர்களின் கவனத்தை ஈர்த்தது.
பயனர்கள் பலரும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள் உண்மையிலேயே இவ்வளவு நீண்ட பட்டியல் கொண்ட உணவு வகைகள் ஆர்டர் செய்யப்பட்டதா? என உறுதி செய்ய சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்யுங்கள். மோசடி நடந்திருக்கலாம் என பதிவிட்டுள்ளனர்.