இந்தியா (National)

திருப்பதி லட்டு தயாரிக்க தாமஸ்-க்கு ஒப்பந்தம்?- தேவஸ்தானம் அளித்த பதில்

Published On 2024-07-18 04:36 GMT   |   Update On 2024-07-18 06:33 GMT
  • லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

திருப்பதி லட்டு தயாரிக்கும் ஒப்பந்தம் தாமஸ் என்கிற ஒருவருக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பது தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான பிரசாரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிராகரித்துள்ளது. மேலும் பல நூற்றாண்டுகளாக ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் மிகச்சிறந்த தரத்துடன் தயாராகி வருவதாகவும், பொய்யான செய்திகளை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

லட்டு குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

லட்டு தயாரிப்பில் தற்போது 980 இந்து சமூக உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர். பழங்காலத்திலிருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புனிதமான கடமைகளை செய்கிறார்கள்.

அவர்களில் ஸ்ரீ வைஷ்ணவ பிராமணர்கள் லட்டுகளை தயாரிக்கவும், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை சேகரிப்பதிலும் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News