இந்தியா

கங்கனாவை தாக்கிய பெண் காவலருக்கு வேலைவாய்ப்பு: இசையமைப்பாளர் அதிரடி

Published On 2024-06-07 11:56 GMT   |   Update On 2024-06-07 11:56 GMT
  • இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா வெற்றி பெற்றார்.
  • அவரை சண்டிகர் ஏர்போர்ட்டில் குல்விந்தர் கவுர் என்ற பெண் காவலர் கன்னத்தில் அறைந்தது சர்ச்சையானது.

புதுடெல்லி:

இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழில் பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியது.

இதையடுத்து, குல்விந்தர் கவுர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், எம்.பி யாக உள்ள ஒருவரை தாக்கியதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இசை அமைப்பாளரும், பாடகருமான விஷால் தத்லானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் வீராங்கனைக்கு ஆதரவு தெரிவித்தார்.

அந்தப் பதிவில், சம்பவத்தின் வீடியோ அறிக்கையை வெளியிட்டு, நான் வன்முறையை எப்போதும் ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எப். பணியாளர்களின் கோபத்தின் அவசியத்தை முற்றிலும் புரிந்துகொள்கிறேன். சி.ஐ.எஸ்.எப். சார்பில் அவருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் அதை ஏற்றுக்கொள்வதற்குத் தேர்வுசெய்யும் பட்சத்தில் அவருக்கு ஒரு வேலை காத்திருக்கிறது என்பதை நான் உறுதிசெய்கிறேன், ஜெய் ஹிந்த், ஜெய் ஜவான், ஜெய் கிசான் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News