இந்தியா
வயநாடு நிலச்சரிவு : கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித்தரப்படும்- சித்தராமையா
- வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
இதையடுத்து இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று முன்னாள் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு பேரிடரில் பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்கும் விதமாக, 100 வீடுகள் கர்நாடக அரசு சார்பில் கட்டித்தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.