இந்தியா

வயநாடு நிலச்சரிவு: மீட்பு பணியில் இருந்து விடைபெற்ற ராணுவ குழு - வீடியோ

Published On 2024-08-09 03:16 GMT   |   Update On 2024-08-09 03:16 GMT
  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு.
  • வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்தது.

வயநாடு நிலச்சரிவைத் தொடர்ந்து இந்திய ராணுவம், துணை ராணுவ படைகள், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, காவல்துறை உள்ளிட்டோர் மீட்பு-தேடுதல் பணியில் கடந்த ஒன்பது நாட்களாக ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்களில் பெரும் பகுதியினர் திருப்பி அனுப்பப்பட்டனர். ராணுவ அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டு திரும்பும் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு வாசிகள் கைத்தட்டி உற்சாகம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


Tags:    

Similar News