இந்தியா
null

மிஸ் இந்தியா பட்டியலில் ஒரு தலித் அல்லது பழங்குடியின பெண் கூட இல்லாதது ஏன்? - ராகுல் கேள்வி

Published On 2024-08-25 05:40 GMT   |   Update On 2024-08-25 05:41 GMT
  • பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.
  • 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு இல்லாமல் உள்ளது.

மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இதுவரை ஒரு தலித் அல்லது பழங்குடியின பெண்ணுக்குக் கூட இடம்பெறாதது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நேற்று நடைபெற்ற 'சம்விதன் சம்மான் சம்மேளன்' நிகழ்ச்சியில் மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

எந்தெந்த அரசு அமைப்புகளில், எந்த ஜாதிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருக்கின்றனர் என்ற தரவுகளை முதலில் சேகரித்தாக வேண்டும். 90 சதவீத மக்களுக்குத் திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பு  இல்லாமல் உள்ளது.

இதுவரை மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்களின் பட்டியலில் தலித் அல்லது பழங்குடியின பெண் யாராவது இருப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், தலித், பழங்குடியினர் அல்லது ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஒருவர் கூட இல்லை. ஊடகங்களில் உயர்மட்டத்தில் இருக்கும் தொகுப்பாளர்களில் ஒருவர் கூட இந்த சமூகங்களை சேர்நதவர்கள் இல்லை. ஆனால் இன்னும் பாட்டு, டான்ஸ் குறித்தும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட் குறித்தும் மட்டுமே ஊடகங்கள் பேசிகொண்டிடுருகின்றன.

விவசாயிகளைப் பற்றியோ தொழிலாளர்களைப் பற்றியோ அவை பேசுவதில்லை. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News