தன்னை கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு வந்த நபரால் பரபரப்பு
- ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
- தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் பாம்பு கடித்த நபர், அந்த பாம்பை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற வினோதமான சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பாலியா தாலுகாவின் சம்பூர்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் ராம்சந்திரா என்பவரின் மகன் ஹரி ஸ்வரூப் (40) என்பவரின் கை விரலில் பாம்பு கடித்தது. ஆனால் ஹரி பயப்படாமல் தைரியமாக அந்த பாம்பை பிடித்து பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார்.
டப்பாவில் பாம்பை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த டாக்டர்கள் கூட பயந்து போனார்கள். ஹரி தன்னை கடித்த பாம்பு இதுதான் என காட்டி டாக்டரிடம் சிகிச்சை அளிக்க சொன்னார்.
அவரது தைரியத்தை கண்டு டாக்டர்கள் வியந்தனர். பாம்பு கடித்த பின்னும் ஹரி நிதானமாக பேசிக் கொண்டிருந்தார்.
தற்போது ஹரியின் உடல்நிலை சீராக உள்ளது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.