செய்திகள் (Tamil News)

டெஸ்ட் கிரிக்கெட்டை முன்னேற்ற பிசிசிஐ கவனம் செலுத்துவதில்லை - கவுதம் காம்பீர்

Published On 2018-05-20 00:20 GMT   |   Update On 2018-05-20 00:20 GMT
பி.சி.சி.ஐ.யினால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் கவனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். #GautamGambhir #BCCI #MarketTestCricket

புதுடெல்லி:

பி.சி.சி.ஐ.யினால் குறைந்த ஓவர் போட்டிகளுக்கு கொடுக்கப்படும் கவனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒருநாள், டி20 போட்டிகளை மார்க்கெட்டிங் செய்வது போன்று, டெஸ்ட் போட்டிகளை பிசிசிஐ மார்க்கெட்டிங் செய்வதில்லை. ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் எனது நியாபகத்தில் இருக்கிறது. முதல் நாளில் இந்தியா பேட்டிங் செய்தபோது மைதானத்தில் 1000 பார்வையாளர்களே இருந்தனர். அன்றைய போட்டியில் சேவாக், சச்சின், லஷ்மண் உள்ளிட்டோர் விளையாடிய போதும் பார்வையாளர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர். எனவே, குறைந்த ஓவர் போட்டிகளில் செலுத்தப்படும் கவனத்தை குறைத்து கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட் வலுவிழந்து வருகிறது. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது சிகப்பு பந்துகளில், அதற்கு முன்பாக மட்டை பிட்ச்களில் வெள்ளை பந்தில் அங்கு ஒருநாள், டி20 போட்டிகளில் ஆடுவதில் பயனில்லை. சிகப்பு பந்துகளில் விளையாடுவது வேறு, வெள்ளை பந்தில் குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாடுவது வேறு. அங்கு விளையாடும் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் டெஸ்ட் போட்டிக்கு தயாராக உதவாது.

இவ்வாறு கவுதம் காம்பீர் கூறியுள்ளார். #GautamGambhir #BCCI #MarketTestCricket
Tags:    

Similar News