கிரிக்கெட் (Cricket)

சிறந்த இந்திய வீரர்களை எடுக்க மற்ற அணிகளிடம் போட்டியிடும் அளவிற்கு பணம் இல்லை: சி.எஸ்.கே. சிஇஓ

Published On 2024-11-11 09:09 GMT   |   Update On 2024-11-11 09:09 GMT
  • தக்கவைத்த வீரர்களுக்காக 65 கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம்.
  • 55 கோடி ரூபாய் உடன்தான் மெகா ஏலத்திற்கு செல்கிறோம்.

ஐ.பி.எல். மெகா ஏலத்திற்கு அணிகள் நிர்வாகம் தயாராகி வருகின்றன. டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் மெகா ஏலத்தில் உள்ளார். இவரை எந்த அணி எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

எம்.எஸ். டோனி இந்த வருடம் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் விளையாடுவாரா? என்பது சந்தேகம். அணியின் நீண்ட கால திட்டம் அடிப்படையில் ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்கலாம் என யூகங்கள் கிளம்பி வருகின்றன.

ஆனால் ரஷிப் பண்ட்-க்கு மிகப்பெரிய தொகை கொடுக்க வேண்டியிருக்கும். தற்போது ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, பதிரனா, ஷிவம் டுபே, எம்.எஸ். டோனி ஆகியோரை 65 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துள்ளது.

இன்னும் கைவசம் 55 கோடி ரூபாய்தான் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் சிறந்த வீரர்களை மற்ற அணிகளுடன் போட்டியிட்டு வாங்கும் அளவிற்கு தங்களிடம் பணம் இல்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "வீரர்களை தக்க வைப்பதற்கு முன்னதாக, நாங்கள் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். டோனி, பயிற்சியாளர் ஆகியோருடன் விவாதித்தோம்.

முந்தைய ஆண்டுகளில் அணியின் வளர்ச்சிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் உதவிய வீரர்கள் சிஎஸ்கே அணி மேலும் தொடர மிகவும் முக்கியமானவர்கள் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.

இவர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுப்பது எளிதாக இருந்தது. இவர்களுடன் குறைந்த கையிருப்பு பணத்துடன்தான் ஏலத்தில் செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். இந்தியாவின் சிறந்த வீரர்களுக்காக மற்ற அணிகளுடம் போட்டியிடன் திறன் எங்களுக்கு இல்லை என்பது தெளிவாக தெரியும்.

நாங்கள் முயற்சி செய்வோம். இருந்தபோதிலும் அதற்கான வாய்ப்பு இருக்காது என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்" என்றார்.

Tags:    

Similar News