கிரிக்கெட் (Cricket)

எம்.எஸ். டோனியை சமன் செய்த ரோகித் சர்மா.. எதில் தெரியுமா?

Published On 2024-10-24 15:14 GMT   |   Update On 2024-10-24 15:14 GMT
  • ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியின் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா மற்றும் மிட்செல் சாண்ட்னர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் முறையே 76, 65 மற்றும் 33 ரன்களை அடித்தனர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக பந்துவீசினார். இவர் மட்டும் ஏழு விக்கெட்டுகளை கைப்பிற்றினார். இவருடன் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பேட் செய்தது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா 9 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதுவரை 143 இன்னிங்ஸில் ஆடிய ரோகித் சர்மா 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட்டஆன இந்திய கேப்டன்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் எம்.எஸ். டோனியை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். எம்.எஸ். டோனி 330 இன்னிங்ஸில் 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News