விளையாட்டு

2030 யூத் ஒலிம்பிக் நடத்த இந்தியா ஆர்வம்

Published On 2024-09-09 11:07 GMT   |   Update On 2024-09-09 11:07 GMT
  • இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.
  • 5ஆவது யூத் ஒலிம்பிக் தொடர் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

உலக அளவில் 15 வயது முதல் 17 வயது வரையிலான இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வாக யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.

இந்த தொடரின் 4 ஆவது எடிஷன் வருகிற 2026 ஆம் ஆண்டு செனகலில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 31 ஆம் தேதி துவங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5ஆவது யூத் ஒலிம்பிக் தொடர் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

2030 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் யூத் ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முன், 2030 யூத் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News