விளையாட்டு (Sports)

கடைசி 35 நொடிகளுக்கு முன்பு 8-2: காயத்தால் 8-10 என தோல்வியடைந்த நிஷா- வைரலாகும் வீடியோ

Published On 2024-08-05 15:39 GMT   |   Update On 2024-08-05 15:39 GMT
  • கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.
  • அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் 68 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப் பிரிவின் கால் இறுதியில் இந்தியாவின் நிஷா தஹியா தென் கொரியாவின் சோல் கம் பாக்கை எதிர்கொண்டார்.

சிறப்பாக விளையாடிய நிஷா 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். கடைசி ஒரு நிமிடம் இருந்த நிலையில் நிஷா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அவர் அரையிறுதிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருந்தது. கடைசி 35 நொடிகள் வரை 8-2 என்ற கணக்கில் நிஷா முன்னிலை வகித்தார்.

அப்போது அவருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை சுதாரித்து கொண்ட தென் கொரியா வீராங்கனை மிரட்டலாக விளையாடு அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். இறுதியில் 10-8 என்ற கணக்கில் தென் கொரியா வீராங்கனை வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

கையில் ஏற்பட்ட வலியையும் மனதில் ஏற்பட்ட வலியையும் தாங்கி கொள்ள முடியாமல் நிஷா கண்ணீர் சிந்தினார். காயத்துடன் போராடிய நிஷாக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News