விளையாட்டு

டிஎன்பிஎல்- திண்டுக்கல் அணிக்கு 124 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மதுரை பாந்தர்ஸ்

Published On 2023-06-18 15:41 GMT   |   Update On 2023-06-18 15:41 GMT
  • ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
  • 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும். கோவையில் 6 'லீக்' போட்டிகள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினத்தோடு அங்கு போட்டிகள் நிறைவு பெற்றன.

நேற்றைய ஓய்வுக்கு பிறகு டி.என்.பி.எல். போட்டிகள் இன்று முதல் திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் சேலம் அணி திருச்சியை வீழ்த்தியது.

இந்நிலையில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

இதனால் மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், முதலாவதாக களமிறங்கிய எஸ்.கார்த்திக் மற்றும் ஹரி நிஷாந்த் ஆட்டத்தை தொடங்கினர்.

எஸ்.கார்த்திக் 4 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜகதீசன் கவுஷிக் அதிகபட்சமாக 34 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்வர்ப்நில் சிங் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டத்தை இழந்தார்.

தொடர்ந்து, தீபன் லிங்கேஷ் 9 ரன்களும், சுதன் கந்தீபன் பூஜ்ஜியம் ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் ஒரு ரன்னும், முருகன் அஷ்வின் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

19 ஓவர்களில் தேவ் ராகுல் 14 ரன்களில் எடுத்திருந்தார். குரஜ்ப்நீத் சிங் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் ஒரு ரன்னிலேயே ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எடுத்தது.

இதன்மூலம், 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கள் அணி களமிறங்க உள்ளது.

Tags:    

Similar News