செய்திகள் (Tamil News)

சென்னையில் காற்று மாசு பாதியாக குறைந்தது- மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Published On 2018-11-07 11:33 GMT   |   Update On 2018-11-07 11:33 GMT
தீபாவளிக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசு பாதியாக குறைந்திருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. #Diwali #AirPollutioncontrolboard
சென்னை:

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அளவை கணக்கிட ஒவ்வொரு ஆண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருவிகள் அமைத்து கணக்கெடுப்பது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, தி.நகர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, ஆலந்தூர் ஆகிய இடங்களில் காற்று மாசு கணக்கிடப்பட்டது.

தீபாவளிக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றில் மாசு பாதியாக குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

தீபாவளி தினமான 6-ந்தேதி இரவு மட்டும் காற்றில் மாசு சிறிது அதிகரித்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

தீபாவளியன்று காற்றில் மாசு அளவு மணிலியில் 168 புள்ளிகளாக இருந்தது. வேளச்சேரியில் 94 புள்ளியும், ஆலந்தூரில் 129 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்தது. #Diwali #AirPollutioncontrolboard
Tags:    

Similar News