தமிழ்நாடு

1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை - ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை

Published On 2024-07-26 03:16 GMT   |   Update On 2024-07-26 03:16 GMT
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
  • அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒகேனக்கலில் தொடர்ந்து 11 ஆவது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News