தமிழ்நாடு

அதிகாரி பயணிக்க தனி ரெயில், 1000 பயணிகளை அலைக்கழித்த கொடுமை: வெங்கடேசன் எம்.பி கண்டனம்

Published On 2023-11-17 05:58 GMT   |   Update On 2023-11-17 05:58 GMT
  • மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.
  • ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.

மதுரை:

ரெயில்வே அதிகாரியான ரூப் நாராயண் ஷங்கர் நேற்று மதுரையில் இருந்து வெளியூர் செல்ல பயணம் மேற்கொண்டார். அப்போது

அவர பயணிக்க வேண்டிய ரெயில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.

அதிகாரி என்பதால், ரெயில்வே நிர்வாகம் 4ம் பிளாட்பாரத்தில் அவர் பயணிக்க தனி ரெயிலை இயக்கியது. அத்துடன், 5வது பிளாட்பாரத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பயணிகளை 5வது பிளாட்பாரத்துக்கு அலைக்கழித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம் உரிய அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில். அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைகழிக்க வைத்த கொடுமை.

மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News