தமிழ்நாடு (Tamil Nadu)

முதுகலை பொறியியல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு- அமைச்சர் பொன்முடி

Published On 2024-07-23 09:26 GMT   |   Update On 2024-07-23 09:26 GMT
  • முதுகலை பொறியியல் கலந்தாய்விற்கு வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.
  • முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தலைமை செயலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதுகலை பொறியியல் கலந்தாய்வு தேதிகளை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

முதுகலை பொறியியல் கலந்தாய்விற்கு வரும் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.

ஆகஸ்ட் 10ல் தரவரிசை பட்டியல் வெளியீடு, ஆகஸ்ட் 13ம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைப்பெறும். ஆகஸ்ட் 19 முதல் 23 வரை பொதுபிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 85 சதவீதம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில் மீதம் இருக்கும் நாட்களில் 100 சதவீதம் சேர்க்கை நடைபெறும்.

ஆகஸ்ட் 28ம் தேதி முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கப்படுவதாகவும் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News