தமிழ்நாடு

கவர்னரை திரும்ப பெற திமுக இலக்கிய அணி கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-11-10 10:06 GMT   |   Update On 2023-11-10 10:08 GMT
  • தமிழக வரலாற்றில் நடந்திராத சாதனையாகும்.
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை:

தி.மு.க. இலக்கிய அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் மாநில செயலாளர் வி. கலைராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், தி.வேலு எம்.எல்.ஏ. மற்றும் இலக்கிய அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களான பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் "நீட் விலக்கே நம் இலக்கு" என்ற கொள்கை முழக்கத்துடன் தொடங்கி உள்ள 50 லட்சம் கையெழுத்து இயக்கத்தை வரவேற்பதுடன் இலக்கிய அணி நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திடுவதுடன் மற்றவர்களிடமும் கையெழுத்து பெற வேண்டும். தமிழக அரசின் செயல்பாடுகளை முடக்கிட நினைக்கும் கவர்னர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் இலக்கிய அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலைஞரின் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை வழங்க வேண்டும்.

விளையாட்டுத்துறை அமைச்சராக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேர் 28 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இதுவரை தமிழக வரலாற்றில் நடந்திராத சாதனையாகும். மேலும் மேலும் எழும்பூர் ஆக்கி திடலை சீரமைத்து உலக தரத்துடன் ஆசிய ஆக்கி போட்டியை நடத்தி காட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வென்று ஒன்றிய அரசாக அமைந்திட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்திட கழக இலக்கிய அணி நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாட்டில் இலக்கிய அணி சார்பில் ஏராளமானோர் ஆயிரக்கணக்கான வாகனங்களில் திரண்டு சென்று கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News