தமிழ்நாடு (Tamil Nadu)

வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2022-09-03 04:02 GMT   |   Update On 2022-09-03 04:02 GMT
  • கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
  • அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது பிறந்தநாளான 5-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் என்.தளவாய்சுந்தரம், பா.வளர்மதி, ப.மோகன், கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், செல்லப்பாண்டியன், சின்னத்துரை, சரவண பெருமாள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News