உள்ளூர் செய்திகள்

வானகரம் சாலைக்கு திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்த திருநங்கை- போக்குவரத்து போலீசார் ஏற்பாடு

Published On 2023-06-09 10:00 GMT   |   Update On 2023-06-09 10:18 GMT
  • விபத்து நடந்த வானகரம் சாலைக்கு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றி சாலையில் போட்டு உடைத்தனர்.
  • திருஷ்டி சுற்றுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரே செய்ததாக தெரிகிறது.

சென்னை:

மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ் சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் வானகரத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரே நாளில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியானார்கள். எனவே இந்த பகுதியில் விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசார் புதிய முயற்சியை மேற் கொண்டனர். அதன்படி போக்குவரத்து போலீசார் தங்களது வாகனத்தில் திருநங்கை ஒருவரை ஏற்றிக் கொண்டு வானகரத்தில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான பகுதிக்கு வந்தனர். விபத்து நடந்த வானகரம் சாலைக்கு பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம் பழம் மூலம் திருஷ்டி சுற்றி சாலையில் போட்டு உடைத்தனர். திருஷ்டி சுற்றுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரே செய்ததாக தெரிகிறது.

ஆனால் அவர்கள் சாலையில் உடைத்த பூசணிக்காயை அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். விபத்து நடக்கக்கூடாது என்பதற்காக சாலைக்கு திருஷ்டி சுற்றியவர்கள், சாலையில் கிடக்கும் பூசணிக்காயால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க நேரிடுமே என்பதை பற்றி கூட கவலைப்படாமல் உடைத்து போட்ட பூசணிக்காயை அகற்றாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

Tags:    

Similar News