விஜய் சொன்ன பொய்.. நாங்க பஞ்சர் பண்ணோம்.. எச் ராஜா
- நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள் உள்ளன.
- ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தான் அங்கு சிகிச்சை பெற முடியும்.
தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சமீபத்தில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச். ராஜா நடிகர் விஜயை தான் விமர்சிக்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "நான் நடிகர் விஜயை விமர்சிக்கவே இல்லை. அவர் தன்னோட மெர்சல் படத்தில் சொன்ன பொய்யை தான் விமர்சித்தேன். நாடு முழுக்க கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாகவே வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் ஏழைகள் கல்வி கற்க அரசு பள்ளிகளில் கல்வி இலவசம். நாடு முழுக்க அரசு மருத்துவமனைகள் உள்ளன. அங்கு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது."
"மலேசியா, சிங்கப்பூரில் நம் நாட்டில் இருப்பது போல் எளிதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமா. ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தான் அங்கு சிகிச்சை பெற முடியும். எனவே அங்கு இலவசமாக இருக்கிறது, இங்கு இலவசமாக இல்லை என்று சொன்ன பொய்க்கு எதிராக நான் அறிக்கை கொடுத்திருந்தேன்."
"நான் விஜய்-க்கு எதிராக அறிக்கை கொடுக்கவில்லை. அந்த படத்தில் சொல்லப்பட்ட பொய், அதை உண்மை என நம்பவைக்க முயற்சித்ததை பன்ச்சர் செய்திருப்போம். அவ்வளவு தான். விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது, நான் வாருங்கள் என்று கூறிவிட்டேன். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மக்கள் பணி செய்யும் உரிமை இருக்கு, அவர் செய்கிறார். தற்போது கோவிலுக்கு சென்றிருக்கிறார், வரவேற்கிறோம். நான் அவர் கட்சி ஆரம்பிக்கும் போதே வரவேற்றிருக்கிறேன்," என்று தெரிவித்தார்.