செய்திகள் (Tamil News)

டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபர்

Published On 2018-06-12 13:19 GMT   |   Update On 2018-06-12 13:19 GMT
சிங்கப்பூரில் டிரம்பை சந்திக்க சென்று 38 ஆயிரம் ரூபாய் செலவழித்து அவரது கார் அருகே நின்று செல்பி எடுத்த திருப்தியில் மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகிழ்சி அடைந்துள்ளார். #TrumpKimSummit
சிங்கப்பூர் : 

மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார்.

இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஓட்டல் வரவேற்பு அறையில் 5 மணி நேரமாக அவர் சுற்றி திரிந்துள்ளார். ஆனால், டிரம்ப் பயன்படுத்தும் பீஸ்ட் என்ற கார் அருகே மட்டுமே நின்று அவரால் செல்பி எடுக்க முடிந்துள்ளது. 

இது குறித்து பேசிய மகாராஜ் மோகன், அனைவரும் டிரம்ப் உடன் செல்பி எடுப்பது சாத்தியம் இல்லாத காரியம் என்று என்னிடம் கூறினார்கள். ஆனால், சில நேரம் எதிர்பாராதவைகளும் நடக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்த முயற்சியில் இறங்கினேன் என அவர் தெரிவித்தார். #TrumpKimSummit 
Tags:    

Similar News