செய்திகள்

ஈராக் நாட்டின் அன்பர் மாகாணத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 11 பேர் உயிரிழப்பு

Published On 2018-08-29 10:19 GMT   |   Update On 2018-08-29 10:19 GMT
ஈராக் நாட்டின் அன்பர் மாகாணத்துக்குட்பட்ட சோதனைச்சாவடி மீது இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். #Suicidecarbomber #Iraqcarbomber
பாக்தாத்:

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் இருந்து சுமார் 340 கிலோமீட்டர் தூரம் மேற்கில் சிரியா நாட்டின் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள அன்பர் மாகாணம் அமைந்துள்ளது.

இந்த மாகாணத்துக்கு உட்பட்ட கைம் மாவட்டம், அல் கைம் நகரின் நுழைவு வாயில் பகுதியில் வழக்கம்போல் இன்று பாதுகாப்பு படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு கார் சோதனைச்சாவடியின் மீது மோதி பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Suicidecarbomber #Iraqcarbomber
Tags:    

Similar News