செய்திகள் (Tamil News)
தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ்

பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: தென்ஆப்பிரிக்காவுக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை

Published On 2019-06-28 13:25 GMT   |   Update On 2019-06-28 16:03 GMT
முக்கியமான போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு 204 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை.
இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 35-வது லீக் ஆட்டம் செஸ்டர்-லி-ஸ்ட்ரீட் ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே, குசால் பெரேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ரபாடா வீசினார். முதல் பந்திலேயே கருணாரத்னே டு பிளிசிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து குசால் பெரேரா உடன் அவிஷ்கா பெர்னாண்டோ ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணி 9.5 ஓவரில் 67 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பெர்னாண்டோ 29 பந்தில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து குசால் பெரேரா 34 பந்தில் 30 ரன்களில் வெளியேறினார்.



அதன்பின் இலங்கை அணியால் மளமளவென ரன்கள் சேர்க்க இயலவில்லை. குசால் மெண்டிஸ் 23 ரன்களும், மேத்யூஸ் 11 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 24 ரன்களும், ஜீவன் மெண்டிஸ் 18 ரன்களும், திசாரா பேரேரா 21 ரன்களும் அடிக்க இலங்கை 49.3 ஓவரில் 203 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் கிறிஸ் மோரிஸ், பிரிட்டோரியஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ரபாடா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினர். பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்கிறது.

Similar News