செய்திகள் (Tamil News)
ஜானி பேர்ஸ்டோ

உலகக்கோப்பை கிரிக்கெட் - இந்திய அணி வெற்றி பெற 338 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

Published On 2019-06-30 13:42 GMT   |   Update On 2019-06-30 14:54 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 38-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற 338 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இங்கிலாந்து அணி.
பர்மிங்காம்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில் நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்கள்களாக களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். அணியின் ஸ்கோர் 160-ஐ எட்டியபோது ஜாசன் ராய் 66 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109  பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் 1 ரன்னில், ஜோ ரூட் 44 ரன்னிலும்,ஜோஸ் பட்லர் 20 ரன்னிலும்,வோக்ஸ் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.  அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார்.   

 

இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 338 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Similar News