புதுச்சேரி

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று சந்தித்து வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த காட்சி.

மழைநீர் தேங்கி நிற்பதை தடுக்க வாய்க்கால் தூர்வாரும் பணி

Published On 2023-08-04 04:36 GMT   |   Update On 2023-08-04 04:36 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை
  • உப்பளம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது.

புதுச்சேரி:

மழைக்காலங்களில் புஸ்சி வீதியில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரை சந்தித்து வாய்க்காலை சுத்தப்படுத்த வேண்டும் என நேரில் சென்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்று தற்போது புஸ்சி வீதியில் கழிநீர் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதுபோல் உப்பளம் தொகுதியில் பல இடங்களில் தண்ணீர் பிரச்சினை இருந்து வருகிறது.

இதனையும் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரிடம் கென்னடி எம்.எல்.ஏ. சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க. தொகுதி துணை செயலாளர் ஆரோக்கிராஜ், கிளைச்செயலாளர்கள் செல்வம், ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News