புதுச்சேரி

இலவச கல்வி கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

null

இலவச கல்வி கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-12-01 09:45 GMT   |   Update On 2023-12-01 09:47 GMT
  • ஆர்ப்பாட்டத்துக்கு ஆறுமுகம் தலைமை வகித்தார்.
  • விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை பார்வையற்றோர் கல்லூரி மாணவர்கள் பட்டதாரிகள் சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம் இணைந்து புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். மணிகண்டன் வரவேற்றார். சிவக்குமார், புவனேஷ், ரோஜாமேரி, சந்துரு, முருகேசன், எத்திராஜூ, ஜான்ஜேம்ஸ், சூரியா முன்னிலை வகித்தனர்.

புதுவையில் உள்ள தனியார், தன்னாட்சி கல்லூரிகளில் மாற்று திறனாளிகளுக்கு இலவச கல்வி, தங்குமிடம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். பிற மாநிலம் போல சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தி சி,டி பிரிவுகளில் 375 காலி பணியிடங்கைள நிரப்ப வேண்டும்.

பார்வையற்றவர்களின் அரசு வேலைவாய்ப்பை 56-ஆக உயர்த்த வேண்டும். வேலையற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து தனியார் நிறுவனத்திலும் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News