புதுச்சேரி

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை- புதுவை டி.ஜி.பியிடம் அ.தி.மு.கவினர் மனு

Published On 2023-05-23 08:46 GMT   |   Update On 2023-05-23 08:46 GMT
  • ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளரான ஓம்சக்தி சேகர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது சட்டத்தை மதிக்காமலும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் செயல்படுகின்றனர்.
  • கோர்ட்டு உத்தரவை மீறி புதுவை, காரைக்காலில் அ.தி.மு.க. பெயர், சின்னத்தை பயன்படுத்தும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அவை தலைவர் அன்பானந்தம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணை செயலாளர்கள் நாகமணி, சுத்துக்கேணி பாஸ்கரன், காந்தி, குமுதன், நகர செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் புதுவை போலீஸ் டி.ஜி.பி. மனோஜ் குமார்லாலை சந்தித்து மனு அளித்தனர்.

கோர்ட்டு மூலம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது செல்லும் என்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் நீக்கம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிந்துள்ளது. இதன் மூலம் எங்களைத்தவிர வேறு எவரும் அ.தி.மு.க கொடி, இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளோர் தான் இதை பயன்படுத்த முடியும். அதை மீறி ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளரான ஓம்சக்தி சேகர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது சட்டத்தை மதிக்காமலும், சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் செயல்படுகிறன்றனர்.

கோர்ட்டு உத்தரவை மீறி புதுவை, காரைக்காலில் அ.தி.மு.க. பெயர், சின்னத்தை பயன்படுத்தும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News