புதுச்சேரி

கோப்பு படம்.

அமைச்சக ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தீர்த்து வைக்க வேண்டும்

Published On 2023-07-28 05:58 GMT   |   Update On 2023-07-28 05:58 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
  • மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில தி.மு.க. துணை அமை ப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை நிர்வாக சீர்திருத்த துறை தற்போது நடந்த மேல்நிலை எழுத்தர் தேர்வில் 116 பணியிடங்கள் மட்டுமின்றி கூடுதலாக 146 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டது.

ஆனால் 116 மேல்நிலை எழுத்தர்களை மட்டுமே தேர்வு செய்துள்ளனர். இதனால் தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

அரசிடம் ஏற்கனவே உதவியாளர் பணியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர் மூலம் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

அதுமட்டுமின்றி புதுவை அமைச்சக ஊழியர்கள் கடந்த ஓராண்டாக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி பல கட்ட போராட்ட ங்களையும் நடத்தி உள்ளனர்.

தற்போது அமைச்சக ஊழியர் சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வருவதால் புதுச்சேரி நிர்வாக துறை அவர்களின் கோரிக்கையை ஏற்று உதவியாளர் பதவியை தற்போதுள்ள மேல்நிலை எழுத்தர்களை கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

மேலும் முதல்-அமைச்சரும் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி இக்கோரிக்கையை நிறை வேற்றவேண்டும்.

அதுமட்டு மல்லாமல் தற்போது துறை ரீதியான தேர்வு எனப்படும் யூ.டி.சி.தேர்வினை நடத்தினால் அது உதவியாளர் பணிக்கு நேரடி போட்டித்தேர்வுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே யூ.டி.சி.போட்டித்தேர்விற்கு கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து வெறும் 116 இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும் உதவியாளர் தேர்வு நடத்தினால் அதில் வெளிமாநிலத்தவரும் பங்குபெறும் நிலைமை உருவாகும்.

இது புதுச்சேரி மாநிலத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி விடும். எனவே முதல்-அமைச்சர் கடந்த காலங்களில் உள்ள நடைமுறையை பின்பற்றி அரசு ஊழியர்களின் கோரிக்கையை தீர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News