தொழில்நுட்பம்
கோப்பு படம்

200 செயலிகளை அதிரடியாக நீக்கிய ஃபேஸ்புக்

Published On 2018-05-15 08:08 GMT   |   Update On 2018-05-15 08:08 GMT
ஃபேஸ்புக் தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:

ஃபேஸ்புக் தளத்தில் இருந்து சுமார் 200 செயலிகள் அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேட்டா மற்றும் தினியுரிமை விதிகளை மீறியதால் இந்த செயலிகள் நீக்கப்படுவதாக ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலிகள் அதிகளவு டேட்டாவை பயன்படுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில் 2014-ம் ஆண்டு விதிமுறைகளை மாற்றுவதற்கு முன் அதிகளவு டேட்டாவை இயக்க அனுமதி வைத்திருந்த செயலிகளை ஃபேஸ்புக் ஆய்வு செய்தது. ஏற்கனவே ஃபேஸ்புக் அறிவித்த படி ஆய்வுக்கு அனுமதியளிக்காத செயலிகள் ஃபேஸ்புக்கில் இருந்து முடக்கப்படும். 

ஃபேஸ்புக்கில் இருக்கும் செயலிகள் தற்சமயம் இருவிதங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. ஒன்று அதிகளவு டேட்டா பயன்படுத்துபவை மற்றொன்று பிரச்சனைகள் இருப்பதாக தெரிந்தால், நேர்முக தேர்வு முறை அல்லது ஆன்-சைட் ஆய்வுகளின் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

செயலிகளை ஆய்வு செய்ய பிரத்யேக குழு நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை சுமார் 1000-க்கும் அதிகமான செயலிகள் ஆய்வு செய்யப்பட்டு 200 செயலிகள் இதுவரை நீக்கப்பட்டு இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை தவறாக பயன்படுத்தும் செயலிகள் நீக்கப்பட்டு, இதுகுறித்த தகவல் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டுக்கு முன் பயனர்கள் இன்ஸ்டால் செய்திருக்கும் செயலிகள் டேட்டாக்களை தவறாக பயன்படுத்தி இருப்பந்தால் பயனர்களுக்கு தெரிவிக்கப்படும். தொடர்ந்து ஆய்வு செய்யப்படுவதாகவும், இதுகுறித்த அப்டேட் தொடர்ந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News