தொழில்நுட்பம்

ஏர்டெல் சலுகையுடன் விற்பனைக்கு வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

Published On 2018-05-26 06:20 GMT   |   Update On 2018-05-26 06:20 GMT
ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:

நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் நோக்கியா 8 சிரோக்கோ, நோக்கியா 7 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களுக்கு எளிய மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

அதன்படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை வாங்க குறைந்தபட்சம் ரூ.3799 முன்பணமாக செலுத்தினால் போதும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் (www.airtel.in/onlinestore) கிடைக்கிறது. இவற்றுடன் போஸ்ட்பெயிட் சலுகையும் சேர்த்து வழங்கப்படுகிறது. இதன் மாத தவனை முறையில் குறைந்தபட்சம் மாதம் ரூ.1499 முதல் துவங்குகிறது.



3 ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனினை ஏர்டெல் வலைத்தளத்தில் ரூ.3799 முன்பணம் செலுத்தி வாங்க முடியும். இதன் பின் 12 மாதங்களுக்கு ரூ.1,499 மாத தவனையாக செலுத்த வேண்டும். இவற்றுடன் பில்ட்-இன் போஸ்ட்பெயிட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜிபி டேட்டா மற்றும் ரோல்ஓவர் வசதி, அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங், இலவச ஏர்டெல் டிவி சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. நோக்கியா 6.1 (4 ஜிபி ரேம்) ஸ்மார்ட்போன் வாங்க ரூ.5,799 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.1,499 செலுத்த வேண்டும்.

நோக்கியா 7 பிளஸ் வாங்குவோர் ரூ.5,599 முன்பணமாக செலுத்தி, 12 மாதங்களுக்கு ரூ.2,099 செலுத்த வேண்டும். முந்தைய நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் அதே போஸ்ட்பெயிட் சலுகைகள் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கும் வழங்கப்படுகிறது.



நோக்கியா 8 சிரோக்கோ ஸ்மார்ட்போன் வாங்க ரூ.8,599 முன்பணம் செலுத்தி, 18 மாதங்களுக்கு ரூ.2,799 செலுத்த வேண்டும். இந்த ஸ்மார்ட்போனுடன் வழங்கப்படும் போஸ்ட்பெயிட் சலுகைகளில் மாதம் 50 ஜிபி டேட்டா, ரோல்ஓவர் சலுகை, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், ஒரு ஆண்டு அமேசான் பிரைம் சந்தா, இலவச ஏர்டெல் டிவி சந்தா மற்றும் ஏர்டெல் செக்யூர் டிவைஸ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஏர்டெல் டிவி செயலிக்கான இலவச சந்தா டிசம்பர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.

புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்களை ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோரில் வாங்குவோர், அதிகாரப்பூர்வ ஏர்டெல் வலைத்தளத்துக்கு சென்று சாதனத்தை தேர்வு செய்து, முன்பணம் செலுத்தலாம். ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்பட்டு, ஆக்டிவேட் ஆனதும் போஸ்ட்பெயிட் சலுகை தானாக ஆக்டிவேட் செய்யப்பட்டு விடும்.
Tags:    

Similar News