தொழில்நுட்பம்
கோப்பு படம்

உண்மையான அன்லிமிட்டெட் சலுகை அறிவித்த ஏர்டெல்

Published On 2018-05-31 05:06 GMT   |   Update On 2018-05-31 05:06 GMT
பாரதி ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
புதுடெல்லி:

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் உண்மையான அன்லிமிட்டெட் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் தினசரி மற்றும் வாராந்திர கட்டுப்பாடுகள் இல்லை என்பதால் எல்லையற்ற வாய்ஸ் கால்களை மேற்கொள்ள முடியும்.

இத்துடன் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த சலுகையை போன்று ரூ.299 விலையில் ஏர்டெல் மற்றொரு சலுகையை வழங்கி வருகிறது. இந்த சலுகையிலும் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், தினமும் 1.4 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


கோப்பு படம்

புதிய சலுகை இந்தியா முழுக்க ஓபன் மார்கெட் ஆப்ஷனாக அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. புதிய சலுகையின் விவரங்கள் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் மொபைல் செயலியில் குறிப்பிடப்படவில்லை.

ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு எவ்வித போட்டியும் ஏற்படுத்தவில்லை. டெலிகாம் நிறுவனங்கள் தற்சமயம் அறிவிக்கும் அனைத்து சலுகைகளிலும் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் புதிய சலுகை எந்நேரமும் வாய்ஸ் கால் மேற்கொள்வோருக்கு ஏற்றதாக இருக்கும். எனினும் நாட்டில் டேட்டா போட்டி இன்னமும் தீர்ந்ததாக தெரியவில்லை. முன்னதாக ஏர்டெல் ரூ.449 பிரீபெயிட் சலுகையை அறிவித்து தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கியது. இத்துடன் இந்த சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 70 நாட்களுக்கு வழங்கப்பட்டுகிறது.
Tags:    

Similar News