தொழில்நுட்பம்

சியோமி Mi8 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2018-05-31 10:24 GMT   |   Update On 2018-05-31 10:24 GMT
சியோமி நிறுவனத்தின் Mi8 மற்றும் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன்களுடன் Mi8 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பீஜிங்:
 
சியோமி நிறுவனத்தின் Mi8 எஸ்இ ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே விழாவில் Mi8 மற்றும் Mi8 எக்ஸ்ப்ளோரர் எடிஷன் ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய Mi8 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5.88 இன்ச் FHD பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI9 இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அழகிய செல்ஃபிக்களை எடுக்க செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பின்புறம் கைரேகை சென்சார், 3120 எம்ஏஹெச் பேட்டரி, குவால்காம் க்விக் சாகர்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



சியோமி Mi8 எஸ்இ சிறப்பம்சங்கள்:

- 5.88 இன்ச் 2244x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி + 18:7:9 AMOLED வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 710 சிப்செட்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி 
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த MIUI 9
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா
- 20 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3120 எம்ஏஹெச் பேட்டரி, க்விக் சார்ஜ் 3.0

சியோமி Mi8 எஸ்இ ஸ்மார்ட்போன் பிளாக், புளு, ரெட் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மாடல் விலை 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.18,960) என்றும் 6 ஜிபி ரேம் மாடல் 1999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,070) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய Mi8 எஸ்இ ஸ்மார்ட்போன் ஜூன் 8-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News