தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் க்ரூப் வாய்ஸ், வீடியோ கால் அறிமுகம்

Published On 2018-07-31 05:03 GMT   |   Update On 2018-07-31 08:17 GMT
ஃபேஸ்புக் ஏற்கனவே அறிவித்ததை போன்று வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதியை வழங்குகிறது. #WhatsApp


ஃபேஸ்புக் இன் வாட்ஸ்அப் 2018 F8 நிகழ்வில் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் விரைவில் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. அறிவிப்பை தொடர்ந்து சோதனை துவங்கப்பட்டது. 

இந்நிலையில் வாய்ஸ் மற்றும் வீடியோ க்ரூப் கால் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு பேருடன் க்ரூப் கால் செய்ய முடியும். இந்த அம்சம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை பார்ப்போம்.



- முதலில் ஒரு வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யவும்

- பின் “add participant” பட்டனை க்ளிக் செய்து பயனர்களை சேர்க்கலாம்

- நீங்கள் சேர்க்க வேண்டிய மற்ற கான்டாக்ட்களை சர்ச் பாக்ஸ் மூலம் தேடி, தேர்வு செய்ய வேண்டும்

- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் வரும் போது உங்களது திரையில் அழைப்பில் இருப்பவர்களை பார்க்க முடியும்

- அழைப்பில் இருப்பவர் மற்றும் பட்டியலிடப்பட்டு இருக்கும் முதல் கான்டாக்ட் தான் உங்களை சேர்த்திருக்க வேண்டும்.

- க்ரூப் வாய்ஸ் கால் செய்யும் போது அதனை வீடியோ கால் ஆக மாற்ற முடியாது.

- க்ரூப் வீடியோ கால் செய்யும் போது கேமராவை ஆஃப் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது கான்டாக்ட்-ஐ எடுக்க முடியாது. கான்டாக்ட் அழைப்பு துண்டிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும்.

- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் ஹிஸ்ட்ரி அழைப்புகளுக்கான டேபில் பார்க்க முடியும். கால் ஹிஸ்ட்ரியை க்ளிக் செய்து ஒவ்வொரு கான்டாக்ட்டையும் பார்க்க முடியும்.

- க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால் செய்யும் போது உஙக்ளை பிளாக் செய்தவருடன் இருக்க முடியும், ஆனால் நீங்கள் பிளாக் செய்த அல்லது உங்களை பிளாக் செய்தவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியாது.

குறுந்தகவல்களை போன்றே வாட்ஸ்அப் க்ரூப் அழைப்புகளும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. உலகம் முழுக்க வெவ்வேறு பகுதிகளில் உள்ள நெட்வொர்க்-க்கு ஏற்ப வேலை செய்யும் படி க்ரூப் காலிங் அம்சம் வழங்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். தளங்களில் வழங்கப்பட்டு இருப்பதால் க்ரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் அம்சம் அடுத்த சில தினங்களில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News