தொழில்நுட்பம்

இந்த தேதிக்குள் இப்படி செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் டேட்டா அபேஸ் ஆகிடும்

Published On 2018-08-25 07:10 GMT   |   Update On 2018-08-25 07:10 GMT
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் இவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களது டேட்டா முழுமையாக அபேஸ் ஆகிவிடும். #WhatsApp


வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் டிரைவில் உள்ள விவரங்களை தானாக பேக்கப் செய்யவில்லை எனில், அவை தானாக அழிக்கப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவில் வாட்ஸ்அப் சாட் உடன் மீடியாக்களை பேக்கப் செய்யாதவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. 

கடந்த ஒருவருடமாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களது டேட்டாவை பேக்கப் செய்யவில்லை எனில், அவை அனைத்து தானாக அழிக்கப்படலாம். மேலும், வாட்ஸ்அப் தகவல்களை பேக்கப் செய்ய கூகுள் டிரைவ் கணக்கில் சைன்-இன் செய்து ஒரு வருடமாக பேக்கப் செய்யவில்லை எனில் வாட்ஸ்அப் கூகுள் டிரைவ் பேக்கப் அழிக்கப்பட்டு விடும். வாட்ஸ்அப் விவரங்களை பேக்கப் செய்ய இறுதி நாள் நவம்பர் 12 ஆகும்.

"ஒரு வருடத்திற்கும் அதிகமாக அப்டேட் செய்யப்படாத வாட்ஸ்அப் பேக்கப்கள் கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் இருந்து தானாக அழிக்கப்பட்டு விடும். இதை தவிர்க்க, வாட்ஸ்அப் தகவல்களை நவம்பர் 1, 2018க்குள் தானாக பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது,” என வாட்ஸ்அப் வலைத்தள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோப்பு படம்

மல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாயந்த செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அந்த வகையில் பலரும் தங்களது புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை கூகுள் டிரைவில் பேக்கப் செய்துள்ளனர். கூகுள் டிரைவில் 15 ஜிபி அளவு இலவச ஸ்டோரேஜ் வழங்கப்படும் நிலையில், வாட்ஸ்அப் பேக்கப்கள் அதிகளவு கூகுள் டிரைவ் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எளிமையாக இருக்கும் பட்சத்தில், ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் கூகுளுடன் இணைந்து வாட்ஸ்அப் பேக்கப் ஃபைல்களை கூகுள் டிரைவில் இலவசமாக பேக்கப் செய்ய இணைந்துள்ளன. இந்த ஒப்பந்தம் நவம்பர் 12-ம் தேதி முதல் செயல்பாட்டு வருகிறது.

வாட்ஸ்அப் ஸ்டோரேஜ்-க்கான இலவச கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பெற பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் டேட்டாக்களை நவம்பர் 12-ம் தேதிக்குள் பேக்கப் செய்ய பரிந்துரைக்கப்படுகின்றனர்.
Tags:    

Similar News