தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் போஸ்ட்களில் இனி இப்படியும் செய்யலாம்

Published On 2018-09-29 06:40 GMT   |   Update On 2018-09-29 06:40 GMT
ஃபேஸ்புக் போஸ்ட்களில் மியூசிக் சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இந்த அம்சம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. #Facebook



ஃபேஸ்புக் புகைப்படங்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்கப்பட இருப்பதாகவும், முதற்கட்டமாக இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட சில பயனர்களுக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதே அம்சம் போட்டோ மற்றும் வீடியோ போஸ்ட்களில் பாடல்களை சேர்க்கக்கோரும் புதிய ஆப்ஷன் ஃபேஸ்புக்கில் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் ஸ்டோரி மற்றும் நியூஸ் ஃபீட் போஸ்ட்களில் வழங்கப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் முதற்கட்டமாக போட்டோ அல்லது வீடியோவை அப்லோடு செய்ய வேண்டும், இனி ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்து அங்கு இருக்கும் பட்டியலில் உங்களுக்கு விருப்பமான இசையை தேர்வு செய்ய வேண்டும். இசையை தேர்வு செய்த பின், ஃபேஸ்புக் குறிப்பிட்ட பாடலை லோடு செய்யும்.



அடுத்து பாடலில் உங்களுக்கு தேவையான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இந்த போஸ்ட்டில் பாடல் தலைப்பு மற்றும் பாடியவர் விவரம் போஸ்ட்டில் ஸ்டிக்கர் வடிவில் இடம்பெற்று இருக்கும்.

லிப் சின்க் லைவ் மற்றும் 360 கோணங்களில் உள்ள வீடியோக்களில் இசையை சேர்க்கும் வசதி வழங்குவதற்கு என ஃபேஸ்புக் நிறுவனம் இசைத் துறையில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பயனர்களுக்கு அதிகப்படியான விருப்பங்களை வழங்க முடியும்.

எனினும் புதிய அம்சம் தற்சமயம் வரை குறுகிய எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் விரைவில் மற்ற பகுதிகளிலும் அதிகளவு பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News