தொழில்நுட்பம்

மூன்று மாதங்களில் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி

Published On 2018-10-31 13:33 GMT   |   Update On 2018-10-31 13:33 GMT
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மூன்றாவது காலாண்டில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. #Xiaomi



இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் 2018 மூன்றாவது காலாண்டில் சியோமி நிறுவனம் மட்டும் சுமார் 29.8 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்த காலாண்டில் மட்டும் சுமார் 1.21 கோடி ஸ்மார்ட்போன் யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தில் இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் சாம்சங் நிறுவனம் முன்னணி இடம் பிடித்திருந்த நிலையில், இம்முறை சியோமி முதலிடம் பிடித்திருக்கிறது. கனாலிஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

கனாலிஸ் அறிக்கையில் ஸ்மார்ட்போன் விற்பனையை பொருத்த வரை இதே காலாண்டில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2017 மூன்றாவது காலாண்டில் மொத்தம் 4.08 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்தம் 4.04 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி இருக்கிறது.



சியோமி மற்றும் விவோ நிறுவனங்கள் வளர்ச்சி பெற்றிருக்கும் நிலையில், முதல் ஐந்து இடங்களில் அல்லாத நிறுவனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போன் அம்சங்கள் தொடர்ந்து சிறப்பாகி வரும் நிலையில், பலர் பிரீமியம் போன் மாடல்களை வாங்கவே விரும்புகின்றனர். 

இதனால் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒன்பிளஸ், சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து இருக்கின்றன. எனினும் ரியல்மி போன்ற பிரான்டுகளின் வரவு காரணமாக பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களும் கணிசமான வளர்ச்சியை பெற்று இருக்கின்றன.

மொபைல் டேட்டா கட்டணம் குறைந்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன் பயன்பாடு எளிமையாகி இருக்கிறது. எனினும், ஃபீச்சர் போன் பயனாளிகள் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் துவக்க விலை ரூ.1500 முதல் கிடைக்கும் நிலையில், பலர் இதனை வாங்குகின்றனர். இத்துடன் ஜியோபோன் வாங்குவோருக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News