தொழில்நுட்பம்

வளைந்த டிஸ்ப்ளேவுடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்

Published On 2019-02-10 07:15 GMT   |   Update On 2019-02-10 07:15 GMT
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக சமீபத்திய காப்புரிய தகவல்களில் தெரியவந்துள்ளது. #Xiaomi #Smartphone



சியோமி நிறுவனம் சாம்சங் உடனான போட்டியை எதிர்கொள்ள தயாராகியுள்ளது. வடிவமைப்பில் சாம்சங்கை எதிர்கொள்ள சியோமி நிறுவனம் வளைந்த ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களில் வளைந்த டிஸ்ப்ளேக்களை 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.

சாம்சங் தனது கேலக்ஸி நோட் எட்ஜ் ஸ்மார்ட்போனில் முதல்முறையாக எட்ஜ் டிஸ்ப்ளேக்களை வழங்கியது. இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வளைந்திருக்கும் படி உருவாக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சாம்சங் கேலக்ஸி எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட்போனில் இருபுறமும் வளைவுகளை கொண்டிருந்தது.

பின் சாம்சங் அறிமுகம் செய்யு்ம ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் மேம்படுத்தப்பட்டு கொண்டே இருந்தது. சாம்சங்கை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பத்தை தங்களது ஸ்மார்ட்போன்களில் வழங்க தொடங்கின். அந்த வரிசையில் தற்சமயம் சியோமியும் இணைந்திருக்கிறது. சியோமி உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் நான்கு முனைகளிலும் வளைந்திருக்கிறது.


புகைப்படம் நன்றி: LetsGoDigital

அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே முழுமையாக நான்கு முனைகளிலும் வளைந்திருக்கும். சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமைகளை பெற சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளது. 

இதுகுறித்து லெட்ஸ்கோடிஜிட்டல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவினுள் செல்ஃபி கேமரா வழங்க சியோமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமராக்கள் மற்றும் எல்.இ.டி. மற்றும் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது.

தற்சமயம் காப்புரிமையை மட்டும் பெற்றிருப்பதால் சியோமி புதிய ஸ்மார்ட்போனினை வெளியிடும் என்பது உறுதியாகவில்லை. எனினும் மெய்சூ சீரோ மற்றும் விவோ அபெக்ஸ் 2019 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக சியோமி தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News