டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி: உறுதிப்படுத்திய சுமித் நாகல்

Published On 2024-06-22 13:26 GMT   |   Update On 2024-06-22 13:26 GMT
  • சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார்.
  • ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்தியாவின் டென்னிஸ் வீரரான சுமித் நாகல், அதிகாரப்பூர்வமாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "நான் 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளேன் என்பதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒலிம்பிக்ஸ் என் இதயத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருப்பதால் இது எனக்கு ஒரு மகத்தான தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுமித் நாகல் ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடியுள்ளார். தற்போது 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளார்.

ரோகன் போபண்ணா, என் ஸ்ரீராம் பாலாஜி ஆண்டுகள் இரட்டையர் பிரிவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். போபண்ணா தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். அவர் தனது ஜோடியை தேர்ந்தெடுத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத தொடக்கத்தில் சுமித் நாகல் ஹெய்ல்பிரோன் சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் முதல் 80 இடத்திற்குள் நுழைந்தார். இது தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்தது.

ஆஸ்திரேலிய ஓபனில் முதன்மை சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். 37-வது இடத்தில் இருந்த அலெக்சாண்டர் பப்லிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News