search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என ரசிகர் ஒருவர் ரோகித்திடம் கேள்வி எழுப்பினார்.
    • நான் எந்த அணியில் விளையாட வேண்டும் நீயே சொல் என ரோகித் கூறினார்.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 46 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 462 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோகித் சர்மா ஓய்வு அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் ஐபிஎல் தொடரில் எந்த அணியில் விளையாட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். உடனே நான் எந்த அணிக்கு விளையாட வேண்டும் என்று நீ ஆசைபடுகிறாய் என கேட்டார். இதற்கு அந்த ரசிகர் ஆர்சிபி அணிக்கு வாங்க என கூறி, ஐ லவ் யூ என கூறினார். இதற்கு ரோகித் எந்த பதிலும் சொல்லாமல் அறைக்கு சென்று விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாகும்.
    • இங்கு 150 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    துபாய்:

    9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா (பி பிரிவு) தங்கள் பிரிவில் முறையே 'டாப்-2' இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    முதலாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தும், 2-வது அரைஇறுதியில் நியூசிலாந்து 8 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியும் இறுதிப்போட்டிக்குள் அடியெடித்து வைத்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி துபாயில் இன்று இரவு நடக்கிறது. இதில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நியூசிலாந்து அணி 3-வது முறையாக (2009, 2010, 2024) இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. அந்த அணி லீக் சுற்றில் 3 வெற்றி (இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக), ஒரு தோல்வி (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) கண்டது. அரைஇறுதியில் வெஸ்ட்இண்டீசை விரட்டியடித்தது.

    நியூசிலாந்து அணியில் பேட்டிங்கில் ஜார்ஜியா பிலிமெர், சுசி பேட்ஸ், கேப்டன் சோபி டிவைனும், பந்து வீச்சில் ஈடன் கார்சன், ரோஸ்மேரி மைர், லீ தஹூஹூவும் வலுசேர்க்கிறார்கள். ஆல்-ரவுண்டராக அமெலியா கெர் அசத்துகிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 2-வது தடவையாக இறுதிப்போட்டியை எட்டி இருக்கிறது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்து கோப்பையை தவறவிட்டு இருந்தது. லீக் சுற்றில் 3 வெற்றி (வெஸ்ட்இண்டீஸ், ஸ்காட்லாந்து, வங்காளதேசத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) கண்டு இருந்த தென்ஆப்பிரிக்க அணி அரைஇறுதியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு ஆப்பு வைத்தது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் கேப்டன் லாரா வோல்வார்ட், தஸ்மின் பிரிட்ஸ், அன்னேக் போஷ்சும், பந்து வீச்சில் மிலாபாவும், ஆல்-ரவுண்டராக மரிஜானா காப்பும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் அந்த அணி இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

    இந்த தொடரில் ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள இவ்விரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் யார் வாகை சூடுவார்கள் என்பதை கணிப்பது கடினம். அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை சாய்த்த நம்பிக்கையுடன் தென்ஆப்பிரிக்க அணி களம் இறங்குகிறது. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    துபாய் ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டதாகும். இங்கு 150 ரன்கள் எடுத்தாலே சவாலான ஸ்கோராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் சர்வதேச போட்டியில் 16 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 4-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    • முதல் இன்னிங்சில் சப்ராஸ் கான் டக் அவுட்டில் வெளியேறினார்.
    • 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் குவித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    பெங்களூரு:

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. 2-வது நாளில் 'டாஸ்' ஜெயித்த இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 134 ரன்னும், டிவான் கான்வே 91 ரன்னும், டிம் சவுதி 65 ரன்னும் சேர்த்தனர். இதைத்தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-வது நாள் முடிவில் 49 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ்கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பாக ஆடிய சப்ராஸ் கான் 110 பந்துகளில் சதத்தை எட்டினார். 4-வது டெஸ்டில் ஆடும் 26 வயது சர்ப்ராஸ்கான் அடித்த முதல் சதம் இதுவாகும். தொடர்ந்து ஆடிய சர்ப்ராஸ் கான் (150 ரன், 195 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) டிம் சவுதி பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். 4-வது விக்கெட்டுக்கு சர்ப்ராஸ் கான், ரிஷப் பண்ட் ஜோடி 177 ரன்கள் திரட்டினர்.

    இறுதியில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 99.3 ஓவர்களில் 462 ரன்கள் குவித்து 'ஆல்-அவுட்' ஆனது. கடைசி 7 விக்கெட்டுகள் 54 ரன்களுக்குள் சரிந்தன.

    முதல் இன்னிங்சில் 'டக்-அவுட்' ஆன சர்ப்ராஸ் கான் 2-வது இன்னிங்சில் 150 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ரன்னின்றி ஆட்டம் இழந்து விட்டு 2-வது இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது இந்திய வீரர் என்ற சிறப்பை சர்ப்ராஸ் கான் பெற்றார். ஏற்கனவே இந்திய வீரர்களில் மாதவ் ராவ், நயன் மோங்கியா இதனை போல் சாதித்துள்ளனர்.

    • தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
    • சாய் சுதர்சன் 213 ரன்னும், வாஷிங்டன் 156 ரன்னும் எடுத்தனர்.

    புதுடெல்லி:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.

    குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர்.

    நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் முடிவில் தமிழகம் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 158.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.

    • இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்கள் குவித்தது.
    • 2வது இன்னிங்சில் ரிஷப் பண்ட் 99 ரன்னில் அவுட் ஆனார்.

    பெங்களூரு:

    இந்தியா, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து, 366 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சர்பராஸ் கானுடன், ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

    இறுதியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    நியூசிலாந்து சார்பில் ஹென்றி, வில்லியம் ஓ ரூர்க் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய வெளிச்சமின்மையால் 4-ம் நாள் ஆட்டம் அத்துடன் முடிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் எம்.எஸ்.டோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

    இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்டரான ரிஷப் பண்ட் 62 இன்னிங்சில் 2,500 ரன்களைக் கடந்துள்ளார்.

    இதற்குமுன் எம்.எஸ்.டோனி 69 இன்னிங்சில் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்து தற்போது புதிய சாதனை படைத்துள்ளார்.

    • முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • 2-ம் இன்னிங்சில் 462 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 2ம் நாளில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

    பின்னர் 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சர்பராஸ் கான் 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 99 ரன்களுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை நூலிழையில் ரிஷப் பண்ட் இழந்தார். அடுத்து விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 462 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது.

    107 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிநாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணி போட்டியை வெல்லுமா என்று ராசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

    • தனது முதல் டெஸ்ட் சதத்தையும் 150 ரன்களாக சர்பராஸ் மாற்றியுள்ளார்.
    • சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பண்ட் 99 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 110 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி அடுத்த இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.

    சதம் விளாசிய பின்பு நிதானமாக விளையாடிய சர்பராஸ் கான் 150 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    முதல்தர கிரிக்கெட்டில் 15 சதங்களை சர்பராஸ் கான் அடித்துள்ளார். சதம் அடித்த பின்பு உடனடியாக தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் பெரிய ரன்கள் அடிப்பதை சர்பராஸ் வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வகையியில் அண்மையில் நடந்த இரானி கோப்பையிலும் தனது சதத்தை இரட்டை சதமாக அவர் மாற்றினார். அவ்வகையில் தனது முதல் டெஸ்ட் சதத்தையும் 150 ரன்களாக சர்பராஸ் மாற்றியுள்ளார்.

    அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 99 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

    தற்போது 5 விக்கெட் இழப்பிற்கு 438 ரன்கள் எடுத்து இந்திய அணி 82 ரன்கள் முன்னிலை எடுத்துள்ளது. களத்தில் கே.எல்.ராகுலும் ஜடேஜாவும் உள்ளனர்.

    • மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும்
    • சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கானும் 97 நம்பர் ஜெர்சியையே அணிந்துள்ளார்

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதலில் களமிறங்கிய சர்பராஸ் கான் ரிஷப் பண்ட் உடன் கூட்டணி அமைத்து ஆடினார். இதில் இதில் சர்பராஸ் கான் 133 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமை சர்பராஸ் கானுக்கு கிடைத்திருக்கிறது.

     

    இதற்கு முன்பாக கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி , அசாருதீன்,திலீப் வெங்சர்கார், ஷிகர் தவான், சுப்மன் கில் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சர்பராஸ் ஸ்கோர் செய்த முதல் சதம் இதுவாகும். 113 பந்துகளில் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன்அவர் சதம் விளாசியுள்ளார். 

    மும்பையைச் சேர்ந்த சர்பராஸ் கானுக்கு, இது 16-வது முதல் டெஸ்ட் போட்டி சதமாகும். தொடர்ச்சியாக அவர் விளாசும் இரண்டாவது சதமும் இதுவே ஆகும். டோனி தொடங்கி ஒவ்வொரு வீரரும் தங்களுக்கே உரிய தனித்துவமான நம்பர் கொண்ட ஜெர்சியை அணிவது வழக்கம. இந்நிலையில் சர்பராஸ் கான் அணிந்துள்ள 97 நம்பர் ஜெர்சி குறித்த சுவாரஸ்ய விளக்கம் கிடைத்துள்ளது.

    97 என்ற நமபிரின் 9 என்பது ஹிந்தியில் 'நவ்' என்று உச்சரிக்கப்டுகிறது. 7 என்பது 'சாத்' என்ற உச்சரிக்கப்படுகிறது. சேர்த்துப்படித்தால் நவுசாத். சுவாரஸ்யமானது என்னவென்றால் சர்பராஸ் கானின் தந்தை பெயர் நவ்சாத் கான். எனவேதான் சர்பராஸ் 97 நம்பர் ஜெர்சியை அணிந்துள்ளார். மேலும் சர்பராஸ் கானின் சகோதரன் முஷீர் கான், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2024 உலகப்கோப்பை போட்டிகளின்போது 97 நம்பர் ஜெர்சியையே அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார்.
    • இந்தியா 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்து இருந்தது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் உடன் ரிஷப் பண்ட் ஆட்டத்தை தொடங்கினார், இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது முதல் சதம் இதுவாகும். மறுமுனையில் ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார். ரிஷப் பண்ட் அரை சதம் விளாசினார்.

    71 ஓவர் முடிவில் 344 ரன்கள் எடுத்திருக்கும் போது மழை குறுக்கிட்ட நிலையில், சர்பராஸ் கான் 154 பந்துகளில் 125 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 56 பந்துகளில் 53 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அத்துடன் 4 வது நாள் உணவு இடைவேளை விடப்பட்டது.

    தற்போது வரை இந்தியா 12 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.

    • 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. மழையால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

    இரண்டாவது நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சில் சிக்கி, 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தது.

    தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது. ரச்சின் ரவீந்திரா 134 ரன், கான்வே 91 ரன், டிம் சவுதி 65 ரன் எடுத்தனர்.

    366 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 35 ரன்னிலும், ரோகித் சர்மா அரை சதம் அடித்து 52 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    விராட் கோலி மற்றும் சர்பராஸ் கான் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். 3-ம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் கோலி 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 70 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதனை தொடர்ந்து, இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில் சர்பராஸ் கான் சதம் விளாசினார். காலை 10 மணி நிலவரப்படி சர்பரஸ் கான் 117 பந்துகளில் 106 ரன்களுடன் விளையாடி வருகிறார். அவருக்கு ஜோடியாக ரிஷப் பண்டும் விளையாடி வருகிறார். அவர் 19 பந்துகளில் 11 ரன்களை எடுத்துள்ளார்.

    இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடி வருகிறது. 

    • பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதுகுறித்து பேசினார்
    • லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது

    2025 ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் வைத்து நடைபெற உள்ளது. இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் இந்திய அணியை பாகிஸ்தான் அனுப்புவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்காது என்ற சூழலே நிலவுகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் [PCB] தீர்வு ஒன்றை முன்மொழிந்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் சென்றுள்ள நிலையில் இந்திய அணி தொடரில் பங்கேற்பதற்காக வழிவகைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

     

    அந்த வகையில் பிசிசிஐ -க்கு பிசிபி கூறிய திட்டம் என்னவென்றால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினால் தொடரில் ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் இந்திய அணி இந்தியாவுக்கு திரும்பலாம். பின்னர் அடுத்த போட்டிக்கு மீண்டும் பாகிஸ்தான் வரலாம். இவ்வாறு ஒவ்வொரு போட்டியின்போதும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்குமாக சென்று சென்று வரும் திட்டத்தை பிசிபி கூறியுள்ளது.

    தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு இடையில் குறைந்தது ஒரு வார இடைவெளி இருப்பதால் இது சாதியாமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டியை முடித்துக்கொண்டு இந்திய அணி சண்டிகர் விமான நிலையம் அல்லது டெல்லி விமான நிலையம் திருப்ப ஏதுவாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருக்கும் லாகூர் நகரத்தில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திட்டத்தை பிசிசிஐ ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.

    கொழும்பு:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வனிந்து ஹசரங்கா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இலங்கை அணியின் விவரம் வருமாறு:

    சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.

    ×