search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா, தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி.

    தோகா:

    உலகின் 2-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    இந்நிலையில், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை 29 நாட்கள் இந்த கால்பந்து திருவிழா நடக்கிறது.

    இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக தகுதி பெற்றது. மீதியுள்ள 31 நாடுகள் தகுதி சுற்று மூலம் நுழைந்தன. இந்த 32 நாடுகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏ பிரிவு - கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவு - இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவு - அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவு - பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா

    இ பிரிவு - ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்

    எப் பிரிவு - பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவு - பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவு - போர்ச்சுக்கல், கானா, உருகுவே, தென் கொரியா

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். டிசம்பர் 2-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றான நாக் அவுட்டுக்கு தகுதி பெறும். டிசம்பர் 3 முதல் 6-ம் தேதி வரை 2-வது சுற்று நடைபெறும். இதில் 16 நாடுகள் விளையாடும். அதில் இருந்து 8 அணிகள் கால் இறுதிக்குள் நுழையும்.

    டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கால் இறுதியும், 13 மற்றும் 14-ம் தேதிகளில் அரை இறுதி ஆட்டங்களும் நடைபெறும். இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடக்கிறது.

    உலக கோப்பையை கைப்பற்ற ஐரோப்பியா-தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும். இதனால் யார் உலக கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தொடக்க நாளில் ஒரே ஒரு ஆட்டம் நடக்கிறது. ஏ பிரிவில் உள்ள கத்தார்-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    முன்னதாக இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட தொடக்க விழா தோகாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அலகோர் அல்பயத் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற அணி உலக கோப்பையை வெல்லுமா? அல்லது புதிய அணி கோப்பையை கைப் பற்றுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு முறை சாம்பியனான இத்தாலி இந்த முறை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • 2வது பாதியில் ஸ்பெயின் அணிக்காக கொலம்பிய வீராங்கனை கோல் அடித்தார்.

    நவி மும்பை,

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்திற்கு ஸ்பெயின்- கொலம்பியா மகளிர் அணிகள் தகுதி பெற்று இருந்தன.

    மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் உள்ள பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதியில் கொலம்பியா அணி வீராங்கனை அனா மரியா குஸ்மான் ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் தவறுதலாக ஸ்பெயின் அணிக்காக ஒரு கோல் அடித்தார்.

    இதையடுத்து அதை சரி செய்ய கொலம்பியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஸ்பெயின் மகளிர் அணி வெற்றி பெற்றதுடன் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஆரம்பம் முதல் அமெரிக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினர்.
    • ஆட்டத்தின் முடிவில் 8-0 என்ற கோல்கணக்கில் அமெரிக்கா வெற்றி பெற்றது.

    புவனேஷ்வர்:

    17 வயதுக்கு உட்பட்டவருக்கான ஜூனியர் உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கி உள்ள இந்த போட்டித் தொடர் 30-ந் தேதி வரை புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில் துவக்க நாளான நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற போட்டி ஒன்றில் இந்திய மகளிர் கால்பந்து அணி பலம் வாய்ந்த அமெரிக்க மகளிர் அணியை எதிர்கொண்டது.

    ஆரம்பம் முதல் தீவிரம் காட்டிய அமெரிக்க வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல் அடித்தனர். அந்த அணி சார்பில் அதிகபட்சமாக மெலினா ரெபிம்பாஸ் பிரே 2 கோல்களை அடித்தார். பதிலுக்கு கோல் போடுவதற்கு இந்திய வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இறுதிவரை இந்திய அணி கோல் அடிக்காததால் அமெரிக்க ஜூனியர் கால்பந்து அணி 8-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    • முதல் போட்டியில் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் விளையாடின.
    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    கொச்சி:

    ஐ.எஸ்.எல்.( இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து) போட்டி கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணியும் மோதின.

    முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 82-வது நிமிடத்தில் அந்த அணியின் இவான் கல்யுஸ்னி 2-வது கோலை அடித்தார். பதிலுக்கு பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    89-வது நிமிடத்தில் கேரள வீரர் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்கள் உலக கோப்பை போட்டிக்கான பிரசாரத்தை முன்வைத்தனர்,
    • போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும்.

    நியோன்:

    உக்ரைனில் தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், போரின் பயங்கரத்தை முறியடிக்கவும், அதன் தாக்கத்தில் இருந்து மீண்டுள்ள மக்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதற்கு உக்ரைன் அரசு ஆயத்தமாகி வருகிறது. 2030ல் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியை ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான கூட்டு முயற்சியை உக்ரைன் தொடங்கி உள்ளது.

    மூன்று நாடுகளின் கால்பந்து கூட்டமைப்பு தலைவர்களும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (உபா) தலைமையகத்தில் இணைந்து இதற்கான பிரச்சாரத்தை முன்வைத்தனர், இது விளையாட்டு உலகிற்கு அப்பால் மக்களை இணைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உக்ரைன் கால்பந்து கூட்டமைப்பு தலைவர் ஆண்ட்ரி பாவெல்கோ, இது லட்சக்கணக்கான உக்ரைன் ரசிகர்களின் கனவு என்றார். மேலும் போரின் பயங்கரத்தில் இருந்து மீண்டவர்கள் அல்லது இனனமும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களின் கனவு என்று கூறிய அவர், விரைவில் உக்ரைன் கொடி பறக்கும் என்றார். உலககோப்பை போட்டியை நடத்தும் திட்டத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி ஆதரவு தெரிவித்திருப்தாகவும் கூறினார்.

    மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பெயின்-போர்ச்சுகல் ஏலம், முன்னர் உபாவின் விருப்பமான போட்டியாளராக மாற்றப்பட்டது. போட்டியை நடத்தும் நாடு குறித்து 2024-ல் பிபா வாக்கெடுபபு நடத்தும். போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் உக்ரைனில் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும்? என்ற விவரம் ஏதும் வெளியாகவில்லை.

    • சென்னையின் அணி அக்டோபர் 10-ந் தேதி மோகன் பகானை எதிர்கொள்கிறது.
    • இந்த போட்டித் தொடரில் புதிதாக பிளே-ஆப் சுற்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

    கொச்சி:

    11 அணிகள் கலந்து கொள்ளும் 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொச்சியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதி தொடங்குகிறது. 

    தொடக்க ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஈஸ்ட் பெங்கால் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 10-ந்தேதி மோகன் பகானை கொல்கத்தாவில் எதிர்கொள்கிறது.

    அதே சமயம் சென்னை அணிக்குரிய முதல் உள்ளூர் ஆட்டம் (பெங்களூரு அணிக்கு எதிராக) நேரு ஸ்டேடியத்தில் 14-ந்தேதி நடக்கிறது. 2 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெறும் இந்த போட்டிக்கான அட்டவணையில் புதிதாக 'பிளே-ஆப்' சுற்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

    புள்ளி பட்டியலில் 3-வது முதல் 6-வது வரை இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் விளையாடும். இவற்றில் இருந்து மேலும் இரு 2 அணிகள் அரைஇறுதிக்கு தேர்வாகும்.

    • 'சி' பிரிவில் தமிழகம், ஒடிசா, டெல்லி அணிகள் இடம் பெற்றுள்ளன.
    • தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    தமிழக அஞ்சல் துறை சார்பில் 34-வது அகில இந்திய அஞ்சல் துறை கால்பந்து போட்டி இன்று முதல் 26-ந் தேதி வரை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தமிழகம், நடப்பு சாம்பியன் கேரளா, அசாம், டெல்லி, இமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.

    ௧௦ அணிகளும் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் தமிழக அணியுடன் ஒடிசா, டெல்லி அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள பிற அணிகளுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். தினமும் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்று காலை 8 மணிக்கு நடக்கும் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். காலை 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழகம்-ஒடிசா அணிகள் மோதுகின்றன. 

    • 2 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக கோப்பை மகளிர் கால்பந்து போட்டி அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
    • இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    புதுடெல்லி:

    17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவிலும் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை பிபா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

    கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது.

    மேலும், வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய பிபா முடிவு செய்துள்ளது.

    • உலக கோப்பை கால்பந்து போட்டியில் நம்பர் ஒன் அணியான பிரேசில் ஜி பிரிவில் இடம் பிடித்துள்ளது.
    • முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி ஆகியவை இ பிரிவில் இடம் பிடித்துள்ளன.

    தோஹா:

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20-ம் தேதி கத்தாரில் நடைபெறுகிறது.

    இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

    ஏ பிரிவில் கத்தார், ஈகுவடார், செனகல், நெதர்லாந்து

    பி பிரிவில் இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

    சி பிரிவில் அர்ஜென்டினா, சவுதிஅரேபியா, மெக்சிகோ, போலந்து

    டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், டென்மார்க், துனிசியா, ஆஸ்திரேலியா

    இ பிரிவில் முன்னாள் சாம்பியன்கள் ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் ஜப்பான், கோஸ்டாரிகா

    எப் பிரிவில் பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

    ஜி பிரிவில் பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

    எச் பிரிவில் போர்ச்சுகல், கானா, உருகுவே, தென்கொரியா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்நிலையில், உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20-ம் தேதி மோதுகின்றன என பிபா தெரிவித்துள்ளது.

    • கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது.
    • காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன.

    போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. கால்பந்தாட்டத்தை தாண்டி ரொனால்டோ ஒரு கார் பிரியர் ஆவார்.

    இவரின் கேரேஜில் பல விலையுயர்ந்த கார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் ஸ்பெயினில் விடுமுறையில் இருக்கிறார். இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரூ .16 கோடி மதிப்பிலான புகாட்டி வேய்ரான் கார் இன்று விபத்தில் சிக்கியுள்ளது. ஸ்பெய்னின், மஜோர்காவில் உள்ள ஒரு வீட்டின் மீது கார் மோதியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்தின் போது காரை ஓட்டிச் சென்றது ஊழியர் தான் என்றும் ரொனால்டோ அல்ல என்றும் முதல்கட்ட தகவல்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இந்த விபத்தில் ஓட்டுநருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் காரின் முன்பகுதியில் சில கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்துள்ளன

    • ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
    • இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன.

    நியூயார்க்:

    ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து நடைபெறும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா உலக கோப்பை கால்பந்து போட்டியாகும்.

    ஒலிம்பிக்கை போலவே உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 1930-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. 2-வது உலக போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் போட்டி நடைபெறவில்லை.

    இதுவரை 21 உலக கோப்பை போட்டிகள் நடந்துள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது.

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டியை ஆசிய கண்டத்தில் உள்ள கத்தார் இந்த ஆண்டு நடத்துகிறது. நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை அங்குள்ள 5 நகரங்களில் 8 மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

    இந்த நிலையில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களை சர்வதேச கால்பந்து சம்மேனம் இன்று அறிவித்தது.

    அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டியை 3 நாடுகள் இணைந்து நடத்துகிறது.

    அமெரிக்காவில் 11 நகரங்களிலும், மெக்சிகோவில் 3 நகரங்களிலும், கனடாவில் 2 நகரங்களிலும் போட்டி நடக்கிறது.

    அமெரிக்காவில் போட்டி நடைபெறும் நகரங்கள் வருமாறு:-

    நியூயார்க் அல்லது நியூஜெர்சி, லாஸ்ஏஞ்சல்ஸ், டல்லாஸ், கனாஸ்சிட்டி, ஹூஸ்டன், அட்லாண்டா, பில்டெல்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், மியாமி, சியாட்டில்.

    மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகோ சிட்டி, மான்ட்டெரி, குதலஜாரா ஆகிய இடங்களிலும், கனடாவில் வான்கூவர், டொரண்டோ ஆகிய நகரங்களிலும் நடக்கிறது.

    உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா 2-வது முறையாக நடத்துகிறது. இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு நடந்தது. இதேபோல் மெக்சிகோவில் 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்று இருந்தது.

    2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்றுகின்றன. 16 நாடுகள் கூடுதலாக கலந்து கொள்கின்றன.

    • தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
    • மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    32 அணிகள் பங்கேற்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் வருகிற நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியை நடத்தும் கத்தார் நேரடியாக தகுதி பெற்றது. தகுதி சுற்று ஆட்டங்கள் மூலம் 30 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

    இந்த நிலையில் கடைசி அணியாக கோஸ்டாரிகா தகுதி பெற்றது. மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா தனது லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது.

    இதில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று உலக கோப்பைக்கு தகுதி பெற்றது. அந்த அணி 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 தோல்வி, 4 டிராவுடன் 25 புள்ளிகள் பெற்றது.

    கோஸ்டாரிகா 6-வது முறையாகவும், தொடர்ந்து 3-வது முறையாகவும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. அப்பிரிவில் வடஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய அணிகள் உள்ளன.

    ×