search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை.
    • திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் இந்து அறநிலை துறை சார்பாக 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண ஆரம்பித்துவிட்டார். வேறு வேலையில்லாததால். தி.மு.க. கூட்டணியை அவர் உடைக்கவும் முடியாது, கொளுத்தவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, நசுக்கவும் முடியாது.

    இது அனைத்தும் அவர் சார்ந்திருக்கக்கூடிய கட்சிக்கு வேண்டுமென்றால் ஏற்படுமே தவிர, தி.மு.க.வுக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் எந்த ஒரு சிறு பாதிப்பும் ஏற்படாது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது என்பது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கருத்தாக இருக்கலாம்.

    தமிழ் தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை மக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் பாடப்பட்டு வருகிறது. சீமான் அதில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார். தமிழ்நாடு, திராவிடம் இதை இரண்டையும் தமிழ் மண்ணில் இருந்து பிரிக்க முடியாத சொற்கள்.

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் திராவிடம் என்ற பெயரோடு தான் இருக்கிறது. இங்கு உள்ள கட்சிகள் திராவிடம் சார்ந்த கட்சிகள் தானே தவிர திராவிடம் சாராத கட்சிகள் இல்லை. யாரும் கட்சி ஆரம்பித்தால் கூட திராவிடம் சார்ந்து தான் கட்சியை ஆரம்பிக்கின்றனர். திராவிடம் என்பது தமிழ் மண்ணிலே ஊறிப்போன ஒன்று. அதை திராவிட கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் முன்னெடுத்துச் செல்லும்.

    ஒரு இயக்கத்தை நாங்கள் அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. அந்த இயக்கத்தின் தலைமை பலவீனமாக இருந்துவிட்டால் அந்த இயக்கம் தானாகவே அழிந்து விடும். இன்று எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை பலவீனமாக உள்ளது. அதனுடைய எடுத்துக்காட்டு தான் இந்த குழப்பம்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர யாரும் தயாராக இல்லை. நம்பிக்கைக்குரிய இணையாக அ.தி.மு.க.வை ஏற்றுக்கொள்ள எந்த கட்சியும் தயாராக இல்லை. அவரும் என்னென்னமோ எண்ணி வலைவீசி பார்க்கிறார். யாரும் அவர் பக்கம் செல்வதற்கு தயாராக இல்லை. அவரை திரும்பி கூட பார்க்கவில்லை. அதுதான் உண்மை.

    சீமான் கற்பனையில் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகலாம். ஏதாவது குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். திருமாவளவனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் உறுதியோடு இருக்கிறார். தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் அரசு அமைவதில் அவர் உறுதியோடு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், முத்துராஜா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் தவ. பாஞ்சாலன், மாமன்ற உறுப்பினர் கனக அம்மன் பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன
    • சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

    சிவகாசி:

    தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தற்போதே அதற்கான பரபரப்புகள் ஆரம்பமாகி விட்டன. புத்தாடைகள் வாங்க தமிழகத்தின் ஒவ்வொரு நகரத்திலும், மக்கள் ஜவுளிக்கடைகளை மொய்த்து வருகின்றனர். இதனால், சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், ஏனைய ஊர்களிலும் கடை வீதிகள் திருவிழா கோலம் பூண்டுள்ளன.

    தீபாவளி என்றாலே பட்டாசு தான். குழந்தைகள் மட்டுமல்லாமல், இளைஞர்களும், பெரியவர்களும் பட்டாசு மற்றும் மத்தாப்பு வெடித்து மகிழாதவர்களே இருக்க மாட்டார்கள். தற்போது சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணங்களைக் காட்டி பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும், பட்டாசுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    பட்டாசு உற்பத்திக்கு பெயர் போன சிவகாசியில், 2500-க்கும் மேற்பட்ட கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகள், சாத்தூர், விருதுநகர் சாலை, சங்கரன்கோவில் சாலைகளில் அதிகளவிலான பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. பட்டாசு நிறுவனங்களின் நேரடி விற்பனை கடைகளும் ஏராளமாக உள்ளது.

    இதனால் சிவகாசியில் பட்டாசுகளின் விலை ஓரளவு குறைவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பட்டாசு பிரியர்கள் குவிந்து வருகின்றனர். பட்டாசு விற்பனை கடைகளில் அனைத்து விதமான பட்டாசு ரகங்கள், மத்தாப்பு வகைகள், நவீன ரக வெடிகள், வாண வெடிகள் என சுமார் 500-க்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் விதவிதமான பேன்சி பட்டாசுகள் ஒவ்வொரு ஆண்டும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல், பட்டாசு தயாரிப்பு விதிமுறைகள் காரணமாகவும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டணம் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசுகளின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

    இதைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படும் சிவகாசிக்கு வெளி மாவட்டம் மற்றும் இன்றி, அண்டை மாநில மக்களும் நேரடியாக வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விலை குறைவு, 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடித்துப் பார்த்து வாங்கலாம் என்பதே இவர்களின் வருகைக்கு முக்கிய காரணம். இதனால் சிவகாசியின் ஒவ்வொரு பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதுகுறித்து, பட்டாசு மொத்த விற்பனனயாளர் ஒருவர் கூறுகையில், தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக வந்தாலும், தற்போது நவராத்திரி விழாவைத் தொடர்ந்து விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் மக்கள் நேரடியாக சிவகாசி வந்து தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

    இன்னும் தீபாவளிக்கு 10 நாட்களே உள்ளதால், வார இறுதி நாட்களான வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    • பெண்களுக்கு உரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.
    • பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துவோரால் அரசின் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    சென்னை:

    சென்னை திருவான்மியூரில் இந்து அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் விழாவில் சீர்வரிசை பொருட்கள் வழங்கி 31 இணைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 31 இணைகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்துவதில் பெருமை, மகிழ்ச்சி அடைகிறோம்.

    * ஆட்சிக்கு வந்த பின்னர் அதிக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது அறநிலையத்துறையில் தான்.

     

    * அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்.

    * அறநிலையத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுக அரசு செயல்படுகிறது.

    * பெண்களுக்கு உரிய உரிமையை நாம் தந்து கொண்டிருக்கிறோம்.

    * கடந்த 3 ஆண்டுகளில் 2,226 திருக்கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    * தமிழகம் முழுவதும் 10,208 திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.

    * திருக்கோவில்களுக்கு சொந்தமான 7000 ஏக்கர் நிலங்கள் திமுக ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன.

    * 10,638 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    * திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோவில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

    * திருக்கோவில்களில் நன்கொடையாளர்கள் அளித்த ரூ.1,103 கோடி நிதி மூலம் கோவில்களில் 9,123 பணிகள் நடைபெறுகின்றன.

    * கோவில்கள் தொடர்பான வழக்குகளை அறநிலையத்துறை சிறப்பாக கையாண்டு சிறந்த தீர்ப்புகளை பெற்று வருகிறது.

    * திருக்கோவில்களில் தமிழில் குடமுழுக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளிலும் நமக்கு சாதமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

    * 9 கோவில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    * பக்தியை பகல் வேஷமாக பயன்படுத்துவோரால் அரசின் பணிகளை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    * நமது சாதனைகளை தடுக்கத்தான் பல வழக்குகள் போடப்படுகிறது. அதனை சட்டப்படியே முறியடிக்கிறோம்.

    * ஒவ்வொரு வழக்குகளிலும் அமைச்சர் சேகர்பாபு வென்றெடுக்கும்போதும் சரியான அமைச்சரைத்தான் தேர்வு செய்துள்ளோம் என மகிழ்ச்சி.

    * திமுக ஆட்சியில் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.

    * அனைத்து மதங்களையும் பாகுபாடின்றி நடத்துவதால் தான் திராவிட மாடல் ஆட்சியை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

    தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்தது.

    தங்கம் விலை மார்ச் மாதம் சவரனுக்கு ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், 2 மாத இடைவெளியில், அதாவது மே மாதத்தில் ரூ.55 ஆயிரம் என்ற நிலையையும் கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

    தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், அதன் விலை அதிரடியாக சரிந்தது. அன்றைய நாளில் மட்டும் பவுனுக்கு ரூ.2,200 குறைந்திருந்தது.

    அதன் தொடர்ச்சியாகவும் விலை சரியத் தொடங்கி கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.50 ஆயிரத்து 640-க்கு வந்தது. ஒரு கட்டத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் செல்லும் என்றெல்லாம் பேசப்பட்டது.

    ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. எந்த அளவுக்கு குறைந்து வந்ததோ, அதே வேகத்தில் மீண்டும் உயர ஆரம்பித்தது. ஒரே வாரத்தில் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை அதிகரித்தது. அதன் பின்னரும் விலை உயர்ந்து, கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.55 ஆயிரத்தையும் தாண்டியது.

    மேலும் விலை ஏறுமுகத்தில் காணப்பட்டு, ரூ.56 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ரூ.56 ஆயிரம் முதல் ரூ.57 ஆயிரம் வரையில் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தது.

    இந்த ஏற்ற, இறக்கத்துக்கு கடந்த 16-ந் தேதி ஒரு முற்றுப்புள்ளி வைத்தது போல, ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்தது. ரூ.57 ஆயிரத்தை கடந்த 3-வது நாளில் ரூ.58 ஆயிரத்தையும் தங்கம் விலை தாண்டி அதிர்ச்சியை கொடுத்துவிட்டது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று சவரன் ரூ.58 ஆயிரத்துக்கு 240-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    20-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    19-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,240

    18-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,920

    17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,௧௨௦

     

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    20-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    19-10-2024- ஒரு கிராம் ரூ. 107

    18-10-2024- ஒரு கிராம் ரூ. 105

    17-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    16-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    • நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.
    • ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ்காரர், அருந்ததியர் மக்களுக்காக எல்.முருகன் போராடியது உண்டா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.

    * அருந்ததியினர் இடஒதுக்கீட்டிற்காக சட்ட போராட்டம் நடத்தி உள்ளோம்.

    * ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    * தேர்தலின்போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு டேட்டா கொடுத்தது பாஜக தான்.

    * கடைநிலை பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என திருமா நினைக்கிறாரா.

    * 7 நீதிபதிகள் தீர்ப்பை சேலஞ்ச் செய்கிறார் என்றால் திருமாவின் நோக்கம் என்ன?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவுக்கு தகுதியில்லை என்று கூறினார்.

    • தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது.

    அம்பை:

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் உருவான கட்சிதான் அ.தி.மு.க. கட்சி தொடங்கியதில் இருந்து 16 தேர்தலில் போட்டியிட்டு 7 முறை ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிகமுறை ஆண்ட கட்சி நமது அதி.மு.க.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் முதலமைச்சரான பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பல சதி திட்டங்கள் தீட்டினார்கள். நம்மிடம் இருந்த சிலரே பதவி வெறியில் இந்த கட்சியை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். அப்படி இருந்தும் அவர்களை மன்னித்து உயர்ந்த பதவியான துணை முதலமைச்சர் பதவி கொடுத்தும், அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லை.

    அ.தி.மு.க. ஓட்டு வங்கி குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியை விட தி.மு.க.வுக்குத்தான் வாக்கு வங்கி குறைந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

    மு.க.ஸ்டாலின் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என படிப்படியாகத்தான் வந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே துணை முதலமைச்சராகி விட்டார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்.

    தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என உயர்நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் கஞ்சா எங்கும் கிடைக்கிறது. அதை முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை.

    அ.தி.மு.க. இரண்டாகி விட்டது, மூன்றாகி விட்டது என தி.மு.க.வினர் கபட நாடகம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.விற்கு தான் செல்வாக்கு குறைந்துள்ளது. அந்த கூட்டணியில் புகைச்சல் தொடங்கி விட்டது. அந்த புகைச்சல் விரைவில் நெருப்பாக பற்றி எரியும். சில நாட்களாக அதன் கூட்டணி கட்சியினர் பொது மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கி விட்டனர்.

    நாம் சொந்த காலில் நிற்கிறோம். தி.மு.க. சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணியை நம்பி உள்ளனர். சிலர் விரைவில் கூட்டணியில் இருந்து வெளியே வர இருக்கின்றனர். பல கட்சிகள் வெளியே வர உள்ளது. நடப்பதை பார்க்கும்போது அப்படி தான் தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தி.மு.க. கூட்டணி விரைவில் உடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி செங்கோலை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    • மழைநீர் அதிகம் தேங்கியதால் பள்ளங்கள் இருப்பது தெரியாத நிலையில் கார் உள்பட பல வாகனங்கள் சிக்கியது.
    • மழைநீர் சாலையில் இருந்து வடிய தொடங்கிய நிலையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

    சூளகிரி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    கடந்த சில தினங்கான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வாகனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 10 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்ட தொடங்கியது. இந்த மழை விடியவிடிய இன்று காலை வரை பெய்துள்ளது.

    சூளகிரி, காமன் தொட்டி, அட்டகுறுக்கி, கோனேரி பள்ளி, சப்படி, ஓசூர், ஜூஜூவாடி, பேரிகை பாகலூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை உள்பட பல இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்.

    இரவு பெய்த மழையால் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மழைநீர் அதிகம் தேங்கியதால் பள்ளங்கள் இருப்பது தெரியாத நிலையில் கார் உள்பட பல வாகனங்கள் சிக்கியது.

    இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சாலையை எளிதில் கடந்து சென்று விடலாம் என்று எண்ணி அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதனால் இருசக்கர வாகனத்தில் சைலன்சரில் தண்ணீர் நிரம்பி ஸ்டாட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஓசூருக்கு வேலைக்கு செல்லும் ஏராளமானோர் கடும் சிரமம் அடைந்தனர். வாகனத்தை சாலையோரம் உள்ள கடைகளில் நிறுத்தி விட்டு அவர்கள் பேருந்தில் ஏறி சென்று விட்டனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்ததால் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மழைநீர் சாலையில் இருந்து வடிய தொடங்கிய நிலையில் வாகனங்களை மெதுவாக இயக்கி சென்றனர்.

    • எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள்
    • பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகனங்கள் மொபைல் ஆப் மூலம் நாடு முழுவதும் வாடகைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களால் தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக அலுவலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதனை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளத்தடுப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தியது. எதிர்க்கட்சிகள் வேண்டுமென்று குறை கூறுகிறார்கள் என்றார். தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சீமான் தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேட்டபோது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மனோன்மணியம் சுந்தரனார் காலத்தில் பாடப்பட்டு தமிழக அரசு அதனை ஏற்று அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த பண்பாடு தெரிந்தவர்கள், அதன் அருமை, பெருமை தெரிந்தவர்களுக்கு தான் புரியும். அவரை (சீமான்) போன்றவர்கள் வெறும் போலி அரசியல்வாதிகள். எந்த நேரத்தில் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள். எனவே அவர்களை மக்கள் புறம் தள்ளுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

    • மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
    • டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    சென்னை:

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

    மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 23-ந்தேதி வங்கக்கடலில் டானா புயல் உருவாக வாய்ப்புள்ளது.

    டானா புயல் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் கடற்கரையை நோக்கி நகரும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வலுப்பெறும் டானா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என தெரிவித்துள்ளது.

    • கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா
    • அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

    சென்னை:

    மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி வேட்கை கொள்ள வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்து செல்வது போன்ற திராவிட மாடல் அரசு மேற்கொள்ளும் முன்னெடுப்புகள் சிறப்புமிக்கது என கனவு ஆசிரியர்களின் கல்விச்சுற்றுலா குறித்து மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    2023-24-ம் கல்வி ஆண்டில் "கனவு ஆசிரியர்'' விருது பெற்ற 55 ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லப்பட உள்ளனர்.

    கல்விச்சுற்றுலா செல்லும் ஆசிரியர்கள், பிரான்ஸ் நாட்டின் கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா செல்லும் கனவு ஆசிரியர்கள் திருச்சியில் நேற்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து கலந்துரையாடி வாழ்த்துகளை பெற்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார். இந்த பதிவிற்கு மறுபதிவிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    திரைகடல் ஓடியும் திரவியம் தேடு. கடல் தாண்டி நாம் பெறும் பெருஞ்செல்வம் கல்வியைத் தவிர வேறொன்று உண்டா? அத்தகைய கல்வியின் சிறப்பை நமது தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களும் - ஆசிரியப் பெருமக்களும் உணர்ந்து கல்வி வேட்கை கொள்ள மேற்கொள்ளும் நமது திராவிட மாடல் அரசின் சிறப்பான முன்னெடுப்பு.

    இந்த பதிவு குறித்து நான் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசியபோது, இதுவரையில் எத்தனை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளோம் என கேட்டேன். ஆறு நாடுகளுக்கு 236 மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளதாகவும் - இந்த பயணத்துடன் 92 ஆசிரியர்களும் இந்த வாய்ப்பினைப் பெற்றதாகவும் கூறினார். இதைக் கேட்டதும் மகிழ்ச்சியால் என் நெஞ்சம் நிறைந்தது.

    இந்த முன்னெடுப்புகளைச் செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும், அவருக்கு துணை நிற்கும் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு.
    • திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர்.

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் (காலை 10 மணி வரை) 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அநேக இடங்களில் நாளைமறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு, 23-ம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    • திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே எங்கள் கனவு என்றார் வன்னி அரசு.
    • திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது என்கிறார் மத்திய மந்திரி எல்.முருகன்.

    நாமக்கல்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும் என்பதே தங்களின் கனவு என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தது விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே, மத்திய அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டியில், விசிக தலைவர் திருமாவளவன் முதல்வர் ஆவதற்கான கனவு நடக்காது. சமூகநீதி குறித்து பேசுவதற்கு திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராவார்? என கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். அவருக்கு அதற்கான தகுதி உள்ளது.

    இதற்காக தமிழனாக, என்னை விட பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் நபர் வேறு யாரும் இருக்க முடியாது.

    எல்.முருகன் இரண்டு முறை மத்திய அமைச்சர் ஆகும் போது திருமாவளவன் முதல்வராகக் கூடாதா?

    உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் அவரை முதல்வராக விடமாட்டீர்கள்?

    இட ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோம்.

    நாங்கள் எப்பாடுபட்டாவது அவரை முதல்வர் ஆக்குவோம் என தெரிவித்தார்.

    ×