என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தலைப்புச்செய்திகள்
- அரசுப்பள்ளி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்தார்.
- பெயர் மாற்றத்திற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் அமைச்சர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி, 'அரிசன் காலனி' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில், 'மல்லசமுத்திரம் கிழக்கு' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயர் மாற்றம் செய்தார்
'கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வரிகளை குறிப்பிட்டு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப்பள்ளியின் பெயரை மாற்றம் செய்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது.
இந்நிலையில் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்வதற்கான அரசாணையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க வெளியிட்டோம்.
தொடர்ந்து இன்று மல்லசமுத்திரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று 'அரிசன் காலனி' எனும் பெயரினை அழித்து, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினோம். இதற்காக போராடி வந்த ஊர் பெரியர் திரு.கணேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
ஊர் மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற வழக்கறிஞர் திரு.G.அன்பழகன் அவர்களிடம் 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அலைப்பேசி வாயிலாக தெரிவித்தோம். மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்" என்று பதிவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அரிசன் காலனி' எனும் பெயரினை 'ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது அவ்வூர் மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்நிலையில் 'ஊராட்சி… pic.twitter.com/UxdKbMoU5Z
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 25, 2024
- இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
- ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் பிரபல கார் மாடலாக சியரா விளங்குகிறது. இந்த நிலையில், சியரா பிராண்டிங்கை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் முற்றிலும் புதிய சியரா மாடல் எலெக்ட்ரிக் மற்றும் ஐ.சி. எஞ்சின் என இருவித ஆப்ஷன்களிலும் விற்பனை செய்யப்படும்.
இதில் முதற்கட்டமாக சியரா எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐ.சி. எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்படும். இரு மாடல்களும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் கர்வ் எலெக்ட்ரிக் மாடலும் அதன்பிறகு ஐசி எஞ்சின் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சியரா மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் Acti.EV ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது டாடா நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் ஆகும். இதே பிளாட்பார்மில் முன்னதாக டாடா பன்ச் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் உருவாகி இருக்கும் சியரா மாடலில் இரட்டை மோட்டார் செட்டப் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் ஹேரியர் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய சியரா மாடலில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
- அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது
- இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென் கொரியாவில் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்கும் உடல் தகுதி உள்ள ஆண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகள் கட்டாயம் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் ராணுவ வேலையில் இருந்து தப்பிக்க 26 வயது இளைஞர் ஒருவர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார்.
இதன்மூலம் உடல் எடை அதிகரித்து ராணுவ சேவை புரிவதற்காக உடல் தகுதி இல்லாமல் போய்விடும் என்பது அவரது மாஸ்டர் பிளான். இந்த திட்டத்தின்படி மானாவாரியாகச் சாப்பிட்டு 102 கிலோ வரை தனது இயல்பான எடையை மூன்றே மாதங்களில் அவர் அதிகரித்துள்ளார்.
அவரது பாடி மாஸ் இண்டக்ஸ் BMI 37.8 வரை அதிகரித்துள்ளது. இது ஒபிசிட்டி எனப்படும் உடல் எடை அதிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவாக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தை கட்னுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் ராணுவ சேவையை தவிர்க்க முயற்சித்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இந்த குற்றத்துக்கு 3 வருடம் தண்டனை வழங்கலாம் என்ற நிலையில் முதல் முறையாக அவர் குற்றம் புரிந்துள்ளதாலும், ராணுவத்திற்கு உண்மையாகச் சேவை செய்வேன் என்று வாக்குறுதி அளித்ததாலும் அவருக்கு 2 வருட சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
மேலும் அவர் தினமும் இரண்டு மடங்கு உணவை உட்கொள்ள உதவிய அவரது நண்பருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விளையாட்டாக இந்த திட்டத்தை சொன்னார் ஆனால் நிஜமாகவே செய்வார் என்று நினைக்கவில்லை என்று பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
- நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
- இந்தப் படத்தின் 'காதல் ஃபெயில்' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இது ரோம்-காம் கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் `கோல்டன் ஸ்பேரோ' வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றுவரை இந்தப் பாடலின் வியூஸ் மற்றும் ரீல்ஸ் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை படக்குழு சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி இந்தப் படத்தின் 'காதல் ஃபெயில்' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலின் வரிகளை தனுஷ் எழுதி பாடியுள்ளார். இதுக்குறித்து சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ஜென் Z சூப் பாடலாக அமைந்துள்ளது.
இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- அன்புமணி ராமதாஸ், தமிழசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், " அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.
இதற்கு, பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ், பாஜக மூத்த தலைவர் தமிழசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ்
அவர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 - 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும்.
ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்?
அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது.
அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- துஷார் தேஸ்பாண்டேவை 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது.
- தீபக் சஹாரை ரூ.9. 25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் துஷார் தேஸ்பாண்டேவை 6.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலை கொடுத்து வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதுபோல் சென்னை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் தீபக் சஹாரை ரூ.9.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இவரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை என்றார்.
- அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி சந்திப்பு பற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.
இந்த பதிலுக்கு பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதிலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம் மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா... ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்...
அதுவும், பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக்க கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..
மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.. தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன்...
2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும்... யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை..
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது
- 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய தினம் மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
அப்போது ஆன்லைன் யுபிஐ பணப் பரிவர்த்தனை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை UPI பணப் பரிவர்த்தனையில், 6.32 லட்சம் மோசடிகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
அறிக்கைபடி, மோசடிகளில் தொடர்புடைய தொகையின் மதிப்பு ₹458 கோடி ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் செப்டம்பர் வரையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை விட 85 சதவீதம் மோசடிகள் அதிகம் பதிவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.
UPI பரிவர்த்தனை மோசடிகள் உட்பட, பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆகியவற்றால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில், வாடிக்கையாளர்களின் மொபைல் எண் சரிபார்ப்பு, தினசரி பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், NPCI மூலம் மோசடிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக எஸ்எம்எஸ், ரேடியோ பிரச்சாரம், விழிப்புணர்வு பிரச்சாரங்களை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.
- நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது.
- தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.
நடிகர் விக்ராந்த் மற்றும் ரித்விகா இணைந்து நடித்த தீபாவளி போனஸ் திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி வெளியானது. இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை ஜெயபால்.ஜே இயக்கியுள்ளார். படத்தின் இசையை மரியா ஜெரால்ட் மேற்கொண்டுள்ளார். தீபக் குமார் தலா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் லோவர் மிடில் கிளாஸ் குடும்பத்தின் நிதர்சத்தையும், எதார்த்தத்தியும் பதிவு செய்துள்ள திரைப்படமாகும். மதுரை மாநகராட்சியில் உள்ள ஒரு குடும்பம் தீபாவளி போனஸை மையமாக வைத்து எடுத்துள்ள திரைப்படமாகும். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படத்தை திரையரங்கில் பார்க்க தவற விட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாரு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திரைப்படத்தின் விமர்சனத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைப்பர்.
- கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியில் சாம் கரண் விளையாடி வந்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. அப்போது இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரணை 2.4 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சாம் கரணின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது
கடந்த 3 ஆண்டுகளாக பஞ்சாப் அணியின் விளையாடி வந்த சாம் கரண் அதற்கு முன்பு சென்னை அணியில் விளையாடி வந்தார். அப்போது சாம் கரணை சென்னை ரசிகர்கள் சுட்டி குழந்தை என்று அன்போடு அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
- கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரை 3.2 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. வாஷிங்டன் சுந்தரின் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் ஐதராபாத் அணியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார்
- குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அரசை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அதானி தமிழகத்திற்கு வந்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக செய்திகள் வந்துள்ளன, இதுபற்றி முதலமைச்சர் விளக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, "டாக்டர் ராமதாசுக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று காட்டமாக பதில் அளித்தார்.
இந்நிலையில் இந்த பதிலுக்கு பாமக தலைவரும் பாராளுமன்ற எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தொடங்கிய பாராளுமன்றகுளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்ற அன்புமணி அங்கு வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது, ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் முதலில் ஐயாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும், உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் தொண்டர்களின் உணர்வை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்