search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாள அட்டை"

    • சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது.
    • கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நாளை முதல் வரும் 30ம் தேதி வரை அனைத்து மண்டலங்களிலும் நடைபெறவுள்ளது.

    விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக சிப் (CHIP) பொருத்திய, க்யூஆர் கோடு (QR CODE) மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    நகர விற்பனைக் குழுவின் 06.11.2024 அன்று நடைபெற்ற 8வது கூட்டத்தில் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக Chip பொருத்திய QR Code மற்றும் இணைய இணைப்பு (Weblink) பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக 22.112024 முதல் 30.112024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் கைபேசியினை கொண்டு வர வேண்டும். கைபேசி எண்ணிற்கு OTP அனுப்பப்படும். அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு புதிய அடையாள அட்டை வழங்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.
    • பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியிருப்ப தாவது:-

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரிபார்க்கப்படும் போது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

    அவர்களின் பதிவு எப்படி செய்யப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், தேவசம்போர்டும் கூட்டாக முடிவு செய்யும். அது தொடர்பான முடிவு நவம்பர் 10-ந்தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்.

    பதினெட்டாம்படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15,500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல கோர்ட்டின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

    பம்பையில் இருந்து சபரி மலைக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.

    மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மின் கழிப்பறைகள் வசதி செய்யப்படும். யாத்திரை காலங்களில் 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.
    • மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரசு அலுவலர்கள் அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தவறாமல் அணிய, துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் வலியுறுத்த வேண்டும் என்று மனித வள மேலாண்மைத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளது.

    புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    • வருகிற 16-ந் தேதி வரை பதிவுகள் நடக்கின்றன.
    • அனைவரும் தங்களது ‘பயோ மெட்ரிக்’ பதிவுகளை வழங்க வேண்டும்.

    புதுடெல்லி:

    18-வது மக்களவைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று தங்களுக்கான அடையாள அட்டையை பெற்று வருகிறார்கள். இதற்கான பதிவுப்பணி கடந்த 4-ந் தேதி பிற்பகலிலேயே தொடங்கிவிட்டது.

    வருகிற 16-ந் தேதி வரை பதிவுகள் நடக்கின்றன. 18-வது மக்களவையில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது 'பயோ மெட்ரிக்' பதிவுகளை வழங்க வேண்டும். பதிவு நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடக்கிறது.

    மேலும் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய 'சி.ஜி.எச்.எஸ்.' மருத்துவ பயன்பாட்டுக்கான பதிவும் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து நேற்று முன்தினம் நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் பதிவு செய்தார்.

    நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அந்த கட்சியின் மற்றொரு எம்.பி. ரவிக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பதிவு செய்தனர். இதேபோல் மேற்கு டெல்லியில் வெற்றி பெற்ற பா.ஜனதா எம்.பி. கமல்ஜீத் செராவத் தனது அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார்.

    தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.க்களில் புதிய எம்.பி.க்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் வரை அவர்களின் தற்காலிக தங்குமிடமாக ஜன்பத்தில் உள்ள 'வெஸ்டர்ன் கோர்ட்' விடுதியும், மாநில அரசுகளின் இல்லங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.

    • ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார்.
    • அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் எல்.பி. நகரில், அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கண்டக்டர் கங்காதரன் பயணிகளிடம் டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

    தில்சுக் நகர் செல்வதற்காக, அந்த பஸ்சில் இளம் பெண் ஒருவர் ஏறினார்.

    கண்டக்டர் கங்காதரனிடம், அந்த பெண் இலவச பயண டிக்கெட் கேட்டார்.

    உடனே கண்டக்டர், ஆதார் அட்டையை காண்பிக்கும்படி கேட்டார்.

    இதைக் கேட்டதுமே அந்த பெண்ணுக்கு கோபம் வந்துவிட்டது. யாரை பார்த்து ஆதார் அட்டை கேட்கிறாய்? என்று கேள்வி கேட்டு, கண்டக்டரை சரமாரியாக திட்டினார்.

    இதனால், திடுக்கிட்ட கண்டக்டர், அடையாள அட்டை இல்லாமல், பஸ்சில் பயணிக்க முடியாது, ஆதார் கார்டு இல்லாவிட்டால் 10 ரூபாய்க்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கண்டக்டரை எட்டி உதைத்து தாக்க தொடங்கினார். அப்போதுதான் அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

    பிறகு, அந்த பெண், திடீரென ரூ.500 நோட்டை கண்டக்டரிடம் தந்து டிக்கெட் கேட்டார்.

    500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்று கண்டக்டர் கூறினார்.

    இதைக் கேட்டதும், அந்த பெண்ணுக்கு மீண்டும் கோபம் அதிகமாகிவிட்டது. அதனால், கண்டக்டரை எட்டி காலால் உதைத்தார். பிறகு, அவரது முகத்திலேயே எச்சிலை துப்பினார்.

    சினிமாவில் வரும் சண்டை காட்சி போல கண்டக்டரை காலால் உதைத்து புரட்டி எடுத்தார்.

    இதனை பார்த்து, பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ந்து போனார்கள் யாருமே அந்த பெண்ணிடம் நெருங்கவில்லை. ஒரு பெண் இதனை தடுக்க அருகில் வந்தார்.

    அவரையும் தலைமுடியை கெட்டியாக பிடித்து இழுத்து, பஸ் கம்பியில் அடித்தார்.

    பஸ்சை அருகில் உள்ள போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போதையில் கண்டக்டர் மற்றும் பெண்ணை தாக்கியது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேண்ட் சட்டை அணிந்து இளம்பெண் பஸ்சில் கண்டக்டரை தாக்கும் காட்சிகளை பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர் .

    அது தெலுங்கானாவில் தற்போது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.
    • அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவின் தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணியில் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்க தபால் மூலம் அனுப்ப தனிச்செயலாளர் தபால் நிலையம் சென்றுள்ளார். அப்போது, அட்டை காணாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
    • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

    மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

    பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

    இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

    இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

    காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

    பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

    போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

    • தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
    • 2-வது கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட உள்ளதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க.வில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு கடந்த மாதம் 7-ந் தேதி முதல் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக வருகிற 27-ந்தேதி முதல் உறுப்பினர் உரிமை சீட்டு வழங்கப்பட உள்ளதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்துக்கான உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது

    • சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.
    • கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார்.

    மானாமதுரை

    இளையான்குடி பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் நஜூமுதீன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் இப்ராகீம், செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை எழுத்தர் முருகன் வாசித்தார். அதன்பின்னர், உறுப்பினர்களின் கேள்விகளுக்குத் தலைவர், செயல் அலுவலர் பதிலளித்தனர்.

    கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இளையான்குடி பேரூ ராட்சியில் போட்டியிட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க பேரூராட்சிகள் இணை இயக்குநருக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்படும்.

    தமிழக அரசின் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், ஒழுங்குபடுத்துதல் திட்டத்தின் கீழ், பேரூராட்சிப் பகுதியில் 131 தெருவோர வியாபாரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க அடையாள அட்டை வழங்கப்படும்.

    பேரூராட்சிப் பகுதியில் 15-வது நிதிக் குழு மானியத் திட்டத்தில் ரூ.54 லட்சத்தில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு குறைந்த தொகைக்கு வழங்கப்பட்ட ஒப்பந் தப்புள்ளிகளுக்கு ஒப்புதல் அளிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
    • நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    சென்னை:

    தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1.1.2024 தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதின்று வெளியிட உள்ளது.

    அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும் மற்றும் பெயர்கள் நீக்கவும்-திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை) மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    இந்த நாட்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும், 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக்கூடிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து, அந்தப் படிவங்களை அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    இதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும்-வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாத பெயர்களையும்-புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும்; தொகுயிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும், தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    அக்டோபர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    அக்டோபர் 27-ந்தேதி முதல் டிசம்பர் 9-ந்தேதி வரை பெயர்களைச் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு மனு கொடுக்க கால அவகாசம் வழங்கப்படும்.

    நவம்பர் 4, 5-ந்தேதி மற்றும் 18, 19-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். 1-1-2024 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள படி, சிறப்பு முகாம்கள் நடைபெற இருக்கும் நாட்களில், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், ஊர்க்கிளை, வார்டு கழக செயலாளர்-நிர்வாகிகள் மற்றும் வாக்குச் சாவடி நிலைய முகவர்கள் ஆகியோர் தங்களை முழுமையாக ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மாவட்ட, மாநகரக் கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்கள் சிறப்பு அக்கறையோடு கழக அமைப்புகளை இப்பணியில் ஈடுபடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இந்தப் பணி குறித்து கழக நிர்வாகிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை தலைமைக் கழகத்துக்கு அவ்வப்போது கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்
    • ஏரளமானோர் கலந்துகொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் 21 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடை யாள அட்டைகள், 25 பேருக்கு பஸ் மற்றும் ரெயில் சலுகை பாஸ் உள்பட 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் வழங்கினார்.

    இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறன் நல முட நீக்கு வல்லுனர் இனியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • விருதுநகரில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டையை கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.
    • வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் மாற்றுத்திறனாளி கள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு வட்டார அளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் ஆனந்த் குமார் மாற்றுத்திறனாளிக் கான தேசிய அடையாள அட்டைகளை மாற்றுத்திற னுடைய குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இம்முகாமில் மாற்றுத் திறன் கொண்ட 60 குழந்தை கள் கலந்து கொண்டனர். இதில் உதவி உபகரணங்கள் வேண்டி 7 மனுக்களும், இலவச பேருந்து அட்டை வேண்டி 20 மனுக்களும் பெறப்பட்டது. இதில் 18 குழந்தைகளுக்கு மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

    மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வருகிற 26-ந்தேதி நரிக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 29-ந்தேதி கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத் தில் 3.10.2023-ந்தேதி எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலை ப்பள்ளியிலும், அருப்புக்கோ ட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5-ந்தேதி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியிலும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 10-ந்தேதி எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13-ந்தேதி எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும்.

    வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 17-ந்தேதி அரசு மேல்நிலைப்பள்ளி யிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 19-ந்தேதி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 21-ந்தேதி ஆர்.சி மேல்நிலைப்பள்ளி யிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 26-ந்தேதி நகராட்சி ஏ.வி.டி.உயர்நிலைப்பள்ளியிலும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடை பெற உள்ளது.

    எனவே மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அடையாள அட்டை பெறுவ தற்கு தேவையான ஆவ ணங்களுடனும் (ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப் படம்-4) மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    இம்முகாமில் மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் உட்பட பள்ளிக்கல்வித்துறை அலுவ லர்கள், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

    ×